போலீஸாக மிரட்டி எடுத்துள்ள விஷால்.! லத்தி படத்தின் first சிங்கிளை வெளியிட்டது படக்குழு

விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் லத்தி படத்தின் முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. விஷாலின் முந்தைய படங்களில் இருந்து இந்த படம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்தான் லத்தி. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார். இந்த படத்தை புதுமுக இயக்கனர் வினோத் குமார் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா படமாக இந்த படம் எடுக்கப்பட்டு வந்தது. நடிகர் விஷாலைப் பொறுத்தவரை பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் சங்கத்திலும் உயர்ந்த பொறுப்பில் உள்ளார்.

போலீஸாக மிரட்டி எடுத்துள்ள விஷால்.! லத்தி படத்தின் first சிங்கிளை வெளியிட்டது படக்குழு 1

விளம்பரம்

2004ம் ஆண்டு வெளிவந்த செல்லமே படத்தின் மூலம் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார். பின்னர் சண்டகோழி, திமிரு, அவன் இவன், துப்பறிவாளன் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார். அரசியலுக்கு வர ஆசைப்பட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பின்னர் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேரமாக படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வீரமே வாகை சூடும். தற்போது ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லத்தி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். படப்படிப்பு ஜனவரியில் தொடங்கியபோது விஷாலின் கையில் காயம் ஏற்ப்பட்டது. இதனால் சில நாட்கள் படபிடிப்பு ரத்தானது. கேரளாவுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் மீண்டும் படபிடிப்புக்கு திரும்பினார். பின்னர் மீண்டும் விஷாலுக்கு ஏற்பட்ட விபத்தால் படத்தின் ஷூட்டிங் இரண்டாவது முறையாக நிறுத்தப்பட்டது.

தொடர்புடையவை  திருப்பரங்குன்றம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகையும் முன்னாள் அமைச்சருமான ROJA..!

போலீஸாக மிரட்டி எடுத்துள்ள விஷால்.! லத்தி படத்தின் first சிங்கிளை வெளியிட்டது படக்குழு 3

விளம்பரம்

தற்போது படத்தில் இருந்து first சிங்கிள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: U1 Records

விளம்பரம்

Leave a Comment