என்ன அடிச்சு கீழ தள்ளி..காலால் எட்டி உதைச்சு.! கதறி அழும் மகராசி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர்

அர்னவ் தன்னை அடித்து கீழே தள்ளியதில் தன் வயிற்றில் பயங்கர வலி ஏற்பட்டதாகவும், பிறகு காலால் எட்டி மிதித்ததாகவும் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா கண்ணீர் மல்க பேட்டியில் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு கேளடி கண்மணி என்ற சீரியல் மூலமாக அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர்.இவர் கர்நாடகாவை சேர்ந்தவர், இவருக்கும் அதில் நடித்த அர்னவ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணமாகாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இருந்தது. இதை திவ்யா தனது instagram பக்கத்தில் வெளியிட்ட போது அர்னவ் அதை வெளியிடக் கூடாது, அது திருமணம் அல்ல விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட சூட்டிங் என்று சொல்லுமாறு அப்பொழுதே வற்புறுத்தி இருக்கிறார்.

என்ன அடிச்சு கீழ தள்ளி..காலால் எட்டி உதைச்சு.! கதறி அழும் மகராசி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் 1

விளம்பரம்

மேலும் கர்ப்பமாக இருந்த விஷயத்தையும் இன்ஸ்டாகிராமில் தெரிவிக்க கூடாது என்று திவ்யாவை கட்டாயப்படுத்தி இருக்கிறார் அர்னவ். ஆனால் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைத்தையும் அறிவித்து விட்டார். இதனால் கோபமடைந்த அர்னவ் திவ்யாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கிறார். மேலும் தன் மதத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் நெருக்கம் காட்டி இருந்திருக்கிறார் அர்னவ் இந்த விஷயம் தெரிந்த திவ்யா தட்டிக் கேட்டதற்கு திவ்யாவை கொடுமைப்படுத்தி இருக்கிறார் அர்னவ். இது தமிழ்நாடு, நீ கர்நாடகாவை சேர்ந்தவர். நான் நினைத்தால் பிரச்சினையை வேறு மாதிரி கொண்டு சென்று விடுவேன் என்று திவ்யாவை மிரட்டி வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு பிரச்சனை அதிகமாகவே திவ்யாவை அடித்து கீழே தள்ளி இருக்கிறார். கர்ப்பமான பெண் என்றும் கூட பார்க்காமல் அவரை காலால் எட்டி மிதித்திருக்கிறார்.

தொடர்புடையவை  ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த கோபி.! உள்ளே என்ட்ரி கொடுத்த இனியா, ராமமூர்த்தி.!

என்ன அடிச்சு கீழ தள்ளி..காலால் எட்டி உதைச்சு.! கதறி அழும் மகராசி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் 3

விளம்பரம்

இதனால் வயிற்றில் பயங்கரமான வலி ஏற்பட ரத்தமும் வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் திவ்யா ஸ்ரீதர். தற்போது தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அவர், அர்னவின் உண்மை முகத்தை பற்றி கூறியிருக்கிறார். மேலும் மருத்துவர்கள் தனக்கு எப்போது வேண்டுமானாலும் கரு கலையலாம் என்று கூறி இருப்பதாகவும் கூறி கண்ணீர் விட்டு அழுதார். அர்னவ் கொரோனா காலத்தில் வேலையில்லாமல் இருந்தபோது, ஒரு வீடு கட்ட முடிவெடுத்திருந்தார். அப்போது அந்த வீடு வாங்குவதற்கும் நான் தான் பணம் கொடுத்தேன். அந்த வீட்டின் இஎம்ஐ அனைத்திற்கும் பணம் கொடுத்தேன். அவனை குழந்தை போல் பார்த்துக் கொண்டேன். ஆனால் அவன் எனக்கு எப்படி துரோகம் செய்துவிட்டான் என்று கூறி கதறி அழுத்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. திவ்யாவின் நிலைமையை பார்த்து பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

என்ன அடிச்சு கீழ தள்ளி..காலால் எட்டி உதைச்சு.! கதறி அழும் மகராசி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் 5

விளம்பரம்

அவர் பேசிய முழு வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

 

தொடர்புடையவை  "என்னை அவர் வீட்டு மஹாலக்ஷ்மி என்று தான் அழைப்பார்" ராஜ்கிரண் பற்றி பேசும் போது உடைந்து அழுத ப்ரியா.!

Youtube Video Code Embed Credits: Thanthi TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment