Categories: அரசியல்

ஜாமியா வன்முறை: 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்

டெல்லி ஜாமியா மாணவர்களுக்கு எதிராக டெல்லி காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 70 மாணவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பேரணியில் திடீரென எழுந்த வன்முறையை கொண்டு மிருகத்தனமான தாக்குதலை காவல்துறை மேற்கொண்டது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த காவல்துறை கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி சரமாரியாக மாணவர்களை தாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி நூலகத்திற்குள் இருந்த மாணவர்களையும் தங்கியுள்ளது காவல்துறை.

ஜாமியா வன்முறை: 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் 1

இதனால் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவற்றுள் பலருக்கு நான்கு தையல்கள் வரை போட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பல மாணவர்களுக்கு எலும்பு முறிவும், தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணை வேண்டுமென ஜாமியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்