“குறைந்த பட வாய்ப்பு…சின்னத்திரை ரூட்டை கையில் எடுத்த ஓவியா”!!

வெளியிட்டது

தமிழ் திரையுலகில் மலையாள மொழியிலிருந்து வந்த மற்றொரு முக்கியமான நடிகை ஓவியா. சில மலையாள திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் கங்காரூ, புதிய முகம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதன் மூலம் இயக்குனர் சற்குணத்தின் அறிமுகம் கிடைக்க தமிழில் நடிகர் விமல் நாயகனாக நடித்த களவாணி படத்தில் நாயகியாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"குறைந்த பட வாய்ப்பு...சின்னத்திரை ரூட்டை கையில் எடுத்த ஓவியா"!! 1

கேரள பெண்ணாக இருந்தாலும் தமிழ் கிராமத்து பெண்களை போல எளிமையான தோற்றம், பாவனை எல்லாம் அந்த படத்திற்கு கச்சிதமாக பொருந்தும் என எண்ணி அவரை இயக்குனர் படத்தில் நடிக்க வைக்க, 2010 ஆம் ஆண்டு விமல், சூரி, சரண்யா பொன்வண்ணன், இளவரசு நடிப்பில் வெளியான அந்த படம் பெரும் வசூல் ஈட்டி இவருக்கு நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது. அந்த படம் கொடுத்த முகவரி தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகினர். இதனைத் தொடர்நது, நாளை நமதே, மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, மூடர் கூடம் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.

தொடர்ந்து நடித்தாலும் பெரிய நாயகியாக இவரால் முன்னேற முடியவில்லை. தமிழ், மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களிலும் அறிமுகமாகி நடிக்க துவங்கினர்.பல்வேறு மொழி படங்கள் கிட்டினாலும் இவருக்கேனே தனியாக பெயர் சொல்லும் படம் எந்த மொழியிலும் அமையாமல் இருந்தது.

அப்போது தான் தமிழில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவர்க்கு கிடைத்தது. உடனே இதில் கலந்து கொண்ட இவர், தன்னுடைய உண்மையான குணத்தாலும், எளிமையான பழகும் பண்பும், அனைவரிடமும் அன்பாக இருக்கும் குணமும்  இவரை இந்த நிகழ்ச்சி இளசுகள் மனதில் ராணி போல நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் தோல்வி அடைந்து இருந்தாலும், இளம் தலைமுறையினர் பலருக்கும் மிகவும் பிடித்தமான நடடிகையாக மாறினார்.

பெற்ற பெயர் அனைத்தையும் அடுத்து நடித்த “90ML” ஒரே படத்தில் நடித்து கெடுத்து கொண்டார். இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய ஓவிய ஆர்மியை சேர்ந்தவர்களே இவரிடம் இந்த படத்தின் மூலம் கோவப்படும் படியான கதைக்களத்தில் இந்த படம் உருவாகி அனைவரையும் ஏமாற்றியது. இப்பொது மீண்டும் சொற்ப படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

மிக பெரிய அளவில் ஓவியா ஆர்மி இன்றளவும் ட்ரெண்டாகி வரும் நிலையில், இப்பொது படவாய்ப்புகள் சுத்தமாக ககுறைந்துள்ள நிலையில் ஓவியா சின்னத்திரையில் களமிறங்கியுள்ளார்.தற்போது ஓவியா ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் “டான்ஸ் ஜோடி டான்ஸ்” என்ற நடன நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர், சினேகா, சங்கீதா ஆகியோருடன் ஓவியாவும் நடுவராக இருக்கப் போகிறார் என்ற உறுதி படுத்தப்பட்ட செய்திகள் அண்மையில் வெளியாகின. இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்