Categories: சினிமா

சண்டைன்னு நான் சொல்லவே இல்லையே.! சந்தோஷ் நாராயணன் உடனான சண்டை குறித்து மனம் திறந்து பேசிய பா. ரஞ்சித்

வெளியிட்டது

தனக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் எந்தவிதமான சண்டையும் இல்லை என்று பா ரஞ்சித் ஒரு விளக்கம் அளித்துள்ளார். சந்தோஷ் நாராயணனுக்கும் பா. ரஞ்சித்துக்கும் பிரச்சனை ஆரம்பித்த இடம் என்ஜாய் என்ஜாமி பாடலில் இருந்துதான். என்ஜாய் எஞ்சாமி என்ற பாடலை அறிவு என்ற கானா பாடகர் எழுதி, அதில் பாடியும் இருந்தார். அதற்கு இசை அமைத்திருந்தவர் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். அவர் மகள் தீயும் அறிவும் இணைந்து தான் அந்த பாடலை பாடியிருந்தார்கள். அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது. youtube இல் பல மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று புதிய சாதனை படைத்திருந்தது அந்த பாடல். அதேபோல் சார்பட்டா என்ற பரம்பரை படத்தில் நீயே ஒளி என்ற பாடலையும் அறிவு தான் எழுதி பாடியிருந்தார். சார்பட்டா பரம்பரை படத்திற்கும் சந்தோஷ் நாராயணனே இசை அமைத்திருந்தார்.

சண்டைன்னு நான் சொல்லவே இல்லையே.! சந்தோஷ் நாராயணன் உடனான சண்டை குறித்து மனம் திறந்து பேசிய பா. ரஞ்சித் 1

இதற்குப் பிறகு சந்தோஷ் நாராயணன் பா ரஞ்சித்தின் படங்களில் இசை அமைக்க அழைக்கப்படவில்லை. இதற்கிடையில் ரோலிங் ஸ்டோன் பத்திரிக்கையில் அறவின் போட்டோ இடம்பெறவில்லை. ஆனால் தீ மற்றும் ராப் பாடகர் ஷான் படங்கள் இடம் பெற்று இருந்தது. ஆனால் அறிவின் படம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதாக அப்போதே பா.ரஞ்சித் கூறியிருந்தார். ஆனால் சந்தோஷ் நாராயணனும், தீயும் எதுவும் பேசாமல் இருந்தனர். இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் துவக்க விழாவில் என்ஜாய் எஞ்சாமி பாடல் பாடப்பட்டது இதிலும் அறிவு கலந்து கொள்ளவில்லை இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது அறிவு வெளிநாட்டில் இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை என்று அந்த போட்டியை இயக்கிய விக்னேஷ் சிவன் சந்தோஷ் நாராயணன் தீ போன்றவர்கள் விளக்கம் அளித்தும் அது ஏற்புடையதாக இல்லாமல் இருந்தது இது குறித்து அறிவும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

 

ஏற்கனவே சார்பேட்டா பரம்பரை படத்திற்கு பின்னர் அறிவும், சந்தோஷ் நாராயணன் இடையே விரிசல் இடம் பெற்றதாக தகவல்கள் வெளியானது. இதில் அறிவு பிரச்சினையும் சேர்ந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பா.ரஞ்சித் தனது அடுத்தப் படம் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். அதே போல் விக்ரம் வைத்து இயக்கும் அடுத்த படத்திற்கு ஜி.வி. பிராகஷை கமிட் செய்துள்ளார் ரஞ்சித். இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பா.ரஞ்சித், சந்தோஷ் நாராயணுடன் இணைந்து 5 படங்களில் பணியாற்றியுள்ளோம், வேறு கலைஞர்களோடு பணியாற்றினால் வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்தேன், அதற்காக இனி அவருடன் பணியாற்றவே மாட்டோம் என்றில்லை, நான் அழைத்தால் மீண்டும் அவர் என்னுடன் இணைந்து பணியாற்றுவார் என்று நினைக்கிறேன். Watch the below video..

Youtube Video Code Embed Credits: Kumudam

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்