Categories: சினிமா

ஆக்ஷனில் இறங்கிய விக்ரம் பிரபு…படம் வேற லெவல்ல இருக்க போகுது..டீஸரே சும்மா தெறியா இருக்கு..

வெளியிட்டது

சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபு அவர்களின் மகனுமாகிய விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் பாயும் ஒளி நீ எனக்கு. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதை நடிகர் கார்த்திக் வெளியிட்டுள்ளார். விக்ரம் பிரபு கும்கி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானர். முதல் படமே மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. பின்னர் இவன் வேற மாதிரி, வாகா, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்காரத் துரை போன்ற படங்களில் நடித்தார். சில படங்கள் வெற்றி பெற்றாலும் பல படங்கள் சரியாக ஓடவில்லை. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் டாணாக்காரன். இந்த படம் ஓடிடியில் வெளியானபோதும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஆக்ஷனில் இறங்கிய விக்ரம் பிரபு...படம் வேற லெவல்ல இருக்க போகுது..டீஸரே சும்மா தெறியா இருக்கு.. 1

டாணாக்காரன் படம் விக்ரம் பிரபுவின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று படத்தின் இயக்குனர் கூறியிருந்தார். அது போலவே அந்த படம் நல்ல திருப்புமுனையாக அமைந்துள்ளது. தற்போது பொன்னியின் செல்வன் படத்திலும் விக்ரம் பிரபு நடித்து வருகிறார். இந்த நிலையில் பாயும் ஒளி நீ எனக்கு படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் நிறைவு பெற்றது. வாணி போஜன் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கார்த்திக் அத்வைத் இந்ந படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது இந்த படம். படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது, விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், பாலு மகேந்திராவின் கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்ற சுரேஷ் பார்கவ் இந்த படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளதாகவும், மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர் படத்திற்கு இசையமைப்பதாகவும் கூறியுள்ளார். படத்தின் டீசரை நீங்களும் காண..Watch the below video..

Youtube Video Code Embed Credits: Divo Music

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்