
சினிமாவில் நாயகர், நாயகிகள் தவிர சில எதார்த்த முகங்களும் மக்கள் மனதை மிக எளிதில் கவர்ந்து விடும். அந்த வகையில் எதார்த்த நடிகராக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் “பூ: ராமு. பூ, நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரை போற்று என சில படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் படத்தின் பேயறை கூறும் பொது அந்த படத்தில் இவர் நடித்த காட்சிகள் நம் கண் முன் தோன்றிவிடுகிறது. நேற்று உடலநல குறைவால் சென்னை ராஜிவ் காந்தி அரசு இவர், மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

2008 ஆம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பூ ராமு. முன்பு கமல் நடிப்பில் வெளியான “அன்பே சிவம்” படத்திலும் பூ ராமு நடித்திருந்தார். இருப்பினும் பூ படமே அவரை ஒரு நடிகராக ரசிகர்கள் மத்தியில் அடையாளம் காணச் செய்தது. பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி பிரின்சிபாலாக நடித்து ரசிகர்களை ராமு கவர்ந்தார். சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கும், கர்ணன் படத்தில் தனுஷுக்கும் பூ ராமு அப்பாவாக நடித்திருப்பார்.

திரையுலக பிரபலங்கள் பலரையும் இவரது மறைவிற்கு தங்களது புகழாஞ்சலியை தெரிவித்து வருகிறார்கள். இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய “நீர்ப்பறவை” படத்தில் நடிகர் “பூ” ராமு லூர்துசாமியாக நடித்து மக்களின் பாராட்டுகளை பெற்று இருந்தார். அவர் மரண செய்தி அறிந்து அதிர்ந்து போயுள்ள சீனு ராமசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார்.

நடிகர் காளி வெங்கட் தன்னுடைய புகழஞ்சலியை தெரிவித்துள்ளார். தோழர் என முதலில் அழைத்த பொது தோழா என அழைக்க சொல்லி, அண்ணனாய், தநதையாய் உன்னுடன் பழகிய பேசிய நாட்களை பொட்டலமாய் மடித்து எடுத்து வைக்குறேன்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர், விநோயோகிஸ்தர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி அவர்களும் தங்களுடைய தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டர் பக்கத்தில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இவர்கள் மட்டுமின்றி திரை துறையை சார்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் தங்களுடைய இரங்கல் செய்திகளை தெரிவித்து வருகிறார்கள்.