Categories: சினிமா

கேப்டன் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘படைத்தலைவன்’ டீசர் இதோ.!

வெளியிட்டது

கேப்டன் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘படைத்தலைவன்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த படத்தின் பட பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காட்டு யானைகளின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட மாறுபட்ட கதைக்களத்தில் சண்முக பாண்டியன் நடித்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கேப்டன் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் 'படைத்தலைவன்' டீசர் இதோ.! 1

நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே மதுரை வீரன் என்கிற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. தற்போது வால்டர், ரேக்ளா உள்ளிட்ட படங்களை இயக்கிய அன்பு இயக்கி வரும் புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்தில் கஸ்தூரிராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டைரக்டர் சினிமாஸ் என்கிற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

புதுமையான கதைக் களத்துடன் காட்டுக்குள் நடக்கும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இந்த கதை உருவாகியுள்ளதாக தெரிகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் உள்ள காடுகளிலும், ஒரிசா மற்றும் தாய்லாந்து போன்ற பகுதிகளிலும் நடத்தி முடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த டீசரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Moviebuff Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்