Categories: சமூகம்

ஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்!வழிகாட்டி உதவிய பாகிஸ்தான் அதிகாரி!!

வெளியிட்டது
ஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்!வழிகாட்டி உதவிய பாகிஸ்தான் அதிகாரி!! 1

ஆபத்தில் சிக்க இருந்த இந்திய விமானத்திற்கு பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அதிகாரி ஒருவர் வழிகாட்டி அதை தடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெய்ப்பூரில் இருந்து 150 பயணிகளுடன் இந்திய விமானம் ஒன்று மஸ்கட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்தது. பாகிஸ்தான் வான் எல்லையில் பறக்க இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் கராச்சி நகரில் இருந்து சற்று தொலைவில் அந்த விமானம் பறந்து சென்றிருந்தது.

அப்போது திடீரென வானிலை மோசமானதன் காரணமாக விமானத்தை அதிகாரி 36,000 அடியில் இருந்து 34,000 அடிக்கு இறக்கினார். இதையடுத்து உதவி கோரி அவசர அழைப்பு விடுத்தார் விமானி. நிலைமையை உணர்ந்து கொண்ட பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து அதிகாரி ஒருவர் உடனடியாக உதவ முன்வந்தார். அவரது வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பயணித்த விமானம் ஆபத்தில் இருந்து தப்பி உள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்