உங்கள மாமான்னு கூப்பிடவா? சரவணனை வெட்கப்பட வைத்த தங்க மயில்.! Cute ஆன ப்ரோமோ

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது சரவணனை, தங்கமயில் ‘மாமா’ என்று அழைக்கிறார். இதை வீட்டில் உள்ள அனைவரும் போனில் ஒட்டு கேட்கின்றனர். ஸ்பீக்கரில் போட்டு பேசிக் கொண்டிருக்கும் சரவணன், வெட்கி தலை குனிந்து அமர்ந்திருக்கிறார். தங்கமயில் குடும்பம் பற்றி உண்மை தெரியாமல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் இப்படி மாட்டிக் கொண்டதே? என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள மாமான்னு கூப்பிடவா? சரவணனை வெட்கப்பட வைத்த தங்க மயில்.! Cute ஆன ப்ரோமோ 1

பாண்டியனின் மூத்த மகனாக இருக்கும் சரவணன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, அவரது தம்பிகள் திருமணத்தை முடித்து விட்டனர். இதனால் சரவணனுக்கு நல்ல இடத்தில் பெண் பார்த்து வைக்க பாண்டியன் முடிவெடுக்கிறார். இதற்காக கல்யாண மாலை நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்லும் அவர்கள் அங்கு தங்கமயில் குடும்பத்தை சந்திக்கின்றனர். நல்ல குடும்பம் என்று சொல்லி அவர்களை பெண் பார்க்கும் செல்கின்றனர். ஆனால் அவர்களின் குடும்பம் சரியான ரவுடி குடும்பம். தெருவில் இருக்கும் அனைவரிடமும் அவர்கள் சண்டை போட்டும் வைத்திருக்கின்றனர்.

மேலும் தங்கமயில் எம் ஏ வரை படித்திருக்கிறார் என்று பொய் சொல்லி இந்த திருமண ஏற்பாடுகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில், அனைவரும் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தங்கமயில் போன் செய்து சரவணனை மாமா என்று அழைக்கிறார். இதனால் சரவணன் வெட்கத்தில் தலை குனிகிறார். அந்த குடும்பம் பற்றி தெரியாமல் இப்படி மாட்டிக்கொண்டீர்களே? என்று ரசிகர்களும் கமெண்ட்களை போட்டு வருகின்றனர். அந்த ப்ரோமோவைக் காண..! கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்