விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் 2 – தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வீட்டிலிருந்து ரூ.25 ஆயிரம் பணத்தைக் காணவில்லை என்று கோமதி பாண்டியனிடம் சொல்ல, அந்த பணத்தை கதிர் எடுத்தான் என நினைத்துக் கொண்டு பாண்டியன் கதிரிடம் சண்டை போடுகிறார். ஆனால் தனது தம்பிகளுக்காக தான் எடுத்தேன் என்று சொல்லி சரவணன் பொய் கூறுகிறார். அதற்காக பாண்டியன் சரவணன் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார் இன்று இரவே பணத்தை வந்து வைக்கும்படி பாண்டியன் சரவணனிடம் கூறுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர் சீசன் 2’ தொடர் எதிர்பார்த்த அளவிற்கு விறுவிறுப்பாக செல்லவில்லை. மந்தமான நிலையிலேயே சென்று கொண்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும். இந்த கதைப்படி பாண்டியனுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். சரவணன், செந்தில் மற்றும் கதிர். மூத்த மகன் சரவணன் திருமணம் ஆகாமல் இருக்கும் நிலையில் இரண்டாவது மகனாக இருக்கும் செந்தில் மீனாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த நிலையில் சரவணன் தவிர அனைவரும் கொடைக்கானலுக்கு டூருக்கு சென்று விட்டு திரும்பினர். வீடு திரும்பிய பின்னர் பாண்டியனின் மனைவி கோமதி வீட்டில் இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தை காணவில்லை என்று சொல்லி பாண்டியனிடம் கூறுகிறார்.
செந்திலின் திருமணத்திற்காக கதிர் அந்த பணத்தை எடுத்து இருப்பார். ஆனால் தனது தம்பிகளை காப்பாற்றுவதற்காக சரவணன் தான் எடுத்ததாக பொய் சொல்லுகிறார். இதனால் கோபமான பாண்டியன் இன்று இரவே ரூ.25 ஆயிரம் பணத்தை திருப்பி வைக்கும்படி கூறுகிறார். இதனால் சரவணன் என்ன செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்த்து எழுந்திருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television