பிக்பாஸ் கவினுக்கு விரைவில் திருமணம்.! பொண்ணு இவங்கதானா? இணையத்தில் கசிந்த தகவல்.!

பிக்பாஸ் மூலமாக பிரபலமான நடிகர் கவின் தற்போது திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார். பிக்பாஸில் இருந்த போது லாஸ்லியாவுடன் காதலில் இருந்த அவருக்கு பிக்பாஸுக்குப் பின்னர் காதல் முறிவு ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் கவின் தனது தோழியும் நீண்ட நாள் காதலியுமான மோனிகா என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்கிற சீரியலின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகர் கவின். அதன் பின்னர் பல ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களில் நடித்து தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.

பிக்பாஸ் கவினுக்கு விரைவில் திருமணம்.! பொண்ணு இவங்கதானா? இணையத்தில் கசிந்த தகவல்.! 1

விளம்பரம்

பின்னர் திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். வெள்ளி திரையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்த அவருக்கு வரப்பிரசாதமாக கிடைத்த ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. பல விமர்சனங்களுக்கு உள்ளான அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது பிக் பாஸ்.

பிக் பாஸ் சீசன் 3ன் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார் கவின். இந்த போட்டியில் கலந்து கொண்ட மற்றொரு போட்டியாளரான லாஸ்லியாவுடன் இவருக்கு காதல் ஏற்பட்டதாக அப்போது கிசு கிசுக்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ் முடிந்து வெளியே வந்த பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் தெரியாதது போல பிரிந்து சென்று விட்டனர். பின்னர் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் கவின். சமீபத்தில் அவர் நடித்த லிஃப்ட் மற்றும் டாடா இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்த படங்களின் மூலமாக கவினுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உருவாகி இருக்கிறது. மேலும் தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியிலும் இவரது செல்வாக்கு உயர்ந்திருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  சிகப்பு நிற உடையில் தங்க சிலை போல மின்னும் அதிதி.! வைரலாகும் அதிதியின் புகைப்படங்கள்

பிக்பாஸ் கவினுக்கு விரைவில் திருமணம்.! பொண்ணு இவங்கதானா? இணையத்தில் கசிந்த தகவல்.! 3

இந்த நிலையில் நடன இயக்குனர் சதீஷ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் கவின். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், தற்போது கவினின் திருமண அறிவிப்பு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

விளம்பரம்

தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் மோனிகா என்பவரை கவின் பல வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் கவினுக்கு விரைவில் திருமணம்.! பொண்ணு இவங்கதானா? இணையத்தில் கசிந்த தகவல்.! 5

விளம்பரம்

பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது லாஸ்லியாவை உருகி உருகி காதலித்தது எல்லாம் வெறும் கண்டன்டுக்கு தானா என்று பலரும் கவினைப் பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் லாஸ்லியா, சாண்டி முகேன் மற்றும் தனது நண்பர்கள் போட்டியில் வெல்ல வேண்டும் என்று 5 லட்ச ரூபாய் உடன் வெளியேறியதெல்லாம் நாடகமா? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  ஆனால் திருமணம் குறித்து இணையத்தில் உலா வரும் தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இது குறித்து கவின் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பதை குறிப்பிடத்தக்கது.!

விளம்பரம்

Leave a Comment