விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தன் வயிற்றில் வளர்ந்து வந்த குழந்தைகள் கலைந்த விஷயத்தை காவியா பார்த்தியிடம் சொல்லாமல் மறைக்கிறார். பார்த்தி குழந்தைகளின் நன்றாக பிறக்க வேண்டும் என்பதற்காக கோவிலில் நேர்த்திக்கடன் செய்து வருகிறார். இப்படியாக இந்த வாரத்திற்க்கான ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியல் நாளுக்கு நாள் அடுத்து என்ன நடக்கும் என்கிற ஆர்வத்தை ரசிகர்களுடைய எகிற வைத்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் பார்த்தியின் வாரிசை வயிற்றில் சுமந்து வந்த காவியாவிற்கு தற்போது கருக்கலைப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஐஏஎஸ் ஆக வேண்டும் என்கிற கனவுடன் பல வருடங்களாக படித்து வரும் காவியா தேர்வு எழுதுவதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் வேறு ஊருக்கு செல்கிறார். அப்போது அவருக்கு வயிற்றில் கடுமையான வலி ஏற்படுகிறது. தேர்வு அறையிலிருந்து வெளியேறி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு காவியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கருக்கலைப்பு ஏற்பட்டு இரண்டு குழந்தைகளும் கலைந்து விட்டதாக கூறுகின்றனர். இதனால் துடிதுடித்துப் போகும் காவியா தனக்கு குழந்தைகள் வேண்டும் என்று சொல்லி மருத்துவமனையிலேயே கதறி அழுகிறார். நிலைமை ஒரு புறம் இப்படி இருக்க பார்த்திபன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக பல பொருட்களை வாங்கி வந்து இருக்கிறார். அதைப் பார்த்ததும் காவியா மேலும் உடைந்து போகிறார்.

தெரிந்தோ தெரியாமலோ உன் மனதை கஷ்டப்படுத்தி விட்டேன் என்னை மன்னித்து விடு, இனி நம் குழந்தைகளுக்காக நாம் வாழ்க்கையை வாழ்வோம் என்றும் காவியாவிடம் பார்த்தி கூறுகிறார்.
மறுபுறம் காவியாவும் பார்த்தியும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்கின்றனர். அங்கு விரைவில் உனக்கும் இதுபோல வளைகாப்பு நடக்கும், அதை நான் பிரம்மாண்டமாக செய்கிறேன் என்று கூறுகிறார். மேலும் கோவிலில் அங்க பிரதட்சனை செய்து தனது நேர்த்தி கடனை நிறைவேற்றுகிறார். இதை பார்க்கும் காவியா எனக்காகவும் குழந்தைக்காகவும் நீங்கள் எவ்வளவு செய்கிறீர்கள் ஆனால் குழந்தைகள் இறந்துவிட்டது, உண்மையை சொன்னால் நீங்கள் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறீர்களோ என தெரியவில்லை என்று சொல்லி அழுகிறார். இப்படியாக இந்த ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ரசிகர்கள் அனைவரும் தயவு செய்து பார்த்தியிடம் உண்மையை கூறுங்கள் என்று சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay television