வெண்பா கழுத்தில் தாலி கட்டிய பாரதி.? நடுத்தெருவில் நிற்கும் கண்ணம்மா.! முடிவுக்கு வந்த பார்ட் 2.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாரதிக்கும் வெண்பாவுக்கும் திருமணம் செய்து வைக்க பாரதியின் தாயார் சௌந்தர்யா முடிவு செய்கிறார். அதன்படி கோவிலில் வைத்து நடைபெறும் திருமணத்தில் பாரதி வெண்பாவின் கழுத்தில் தாலி கட்டுவது போன்ற ப்ரோமோவை தற்போது வெளியிட்டு இருக்கின்றனர். சீரியல் முடிவடைய இருக்கும் நிலையில் தற்போது இப்படி அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக பல ப்ரோமோக்களை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெண்பா கழுத்தில் தாலி கட்டிய பாரதி.? நடுத்தெருவில் நிற்கும் கண்ணம்மா.! முடிவுக்கு வந்த பார்ட் 2.! 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி மக்கள் மனங்களை வென்ற ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா சீசன் 1. தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீசன் 2 கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.

சீசல் 1-க்கு கிடைத்தது போல் சீசன் 2 விற்கு வரவேற்பு சுத்தமாக கிடைக்கவில்லை. ஆரம்பம் முதலே டிஆர்பி ரேட்டிங்கில் மிகப்பெரிய அடி வாங்கி வந்தது சீசன் 2. மேலும் கதைக்களமும் நடிகர்கள் தேர்வும் சரியாக இல்லை என்று சொல்லி பலரும் சீரியலை பார்ப்பதையே நிறுத்திருந்தனர். இந்த நிலையில் ராதிகா சரத்குமார் தயாரித்து வரும் கிழக்கு வாசல் சீரியல் வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது என்கிற தகவல் வெளியானது முதலே பாரதி கண்ணம்மா முடிவுக்கு வருவதாக இணையத்தில் தகவல் கொடிகட்டி பறந்தது. அதை மெய்ப்பிக்கும் வண்ணம் தற்போது கடைசி அத்தியாயம் என்று சொல்லி ப்ரோமோக்களை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டு வருகிறது விஜய் தொலைக்காட்சி.

விளம்பரம்
தொடர்புடையவை  உங்க ஈஸ்வரி கேட்டரிங்க்கு ஆள் பத்தலன்னு என்ன கல்யாணம் பண்ணி வச்சீங்களா? பாக்கியவை கலாய்த்த அம்ரிதா.!

வெண்பா கழுத்தில் தாலி கட்டிய பாரதி.? நடுத்தெருவில் நிற்கும் கண்ணம்மா.! முடிவுக்கு வந்த பார்ட் 2.! 3
நேற்றைக்கு வெளியான ப்ரோமோவில் பாரதி கண்ணம்மா என்பவர் கண்ணம்மாவே கிடையாது அவர் பெயர் சித்ரா என்றும், பாரதியின் தந்தையை கொலை செய்து விட்டு சித்ரா ஜெயிலுக்கு வந்த விஷயத்தை போலீஸ் ஒருவர் வந்து பாரதியின் வீட்டில் கூறுகின்றனர்.

இதனால் கடுப்பான பாரதி தற்போது கண்ணம்மாவை வீட்டை விட்டு வெளியே அடித்து துரத்தி விட்டார். மூன்று நாட்களில் அவர் தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிப்பேன் என்று கூறிவிட்டு சொல்கிறார். மேலும் உண்மையை நிரூபிப்பதற்காக நாகராஜன் என்பவரை தேடி கண்ணம்மா அலைந்து கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க வெண்பாவிற்கும் பாரதிக்கும் தற்போது திருமணம் நடைபெறுகிறது. வெண்பாவின் கழுத்தில் பாரதி தாலி கட்டுகிறார். உண்மையில் பாரதிக்கும் வெண்பாவுக்கும் திருமணம் முடிந்து விட்டதா? கண்ணம்மாவின் நிலை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment