உங்க ஈஸ்வரி கேட்டரிங்க்கு ஆள் பத்தலன்னு என்ன கல்யாணம் பண்ணி வச்சீங்களா? பாக்கியவை கலாய்த்த அம்ரிதா.!

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமிழ் ரித்திகா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு பாக்கியலட்சுமியை கலாய்த்து இருக்கிறார். அந்த வீடியோவில் நானும் ஈஸ்வரி கேட்டரிங் சர்வீஸில் ஒரு சமையல்காரியாக இணைந்து விட்டதாக காமெடியாக பேசி இருக்கிறார். அப்போது அங்கு இருக்கும் பாக்யாவும் சேர்ந்து கொண்டு ரித்திகாவை கலாய்த்து கொண்டிருக்கிறார். அந்த அழகான வீடியோ தற்போது பார்வையாளர்களையும், லைக்குகளையும் குவித்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி பல இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக இருக்கும் ஒரு தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கணவனால் கைவிடப்பட்ட பாக்யா தற்போது குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, கணவன் கட்டிய வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டை விற்கப் போவதாகவும், காலி செய்து விடு படியும் கணவன் ஒரு பக்கம் தொல்லை கொடுத்து வருகிறார். இதை எல்லாம் சமாளித்து வாழ்க்கையை ஓட்டி வருகிறார் பாக்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்க ஈஸ்வரி கேட்டரிங்க்கு ஆள் பத்தலன்னு என்ன கல்யாணம் பண்ணி வச்சீங்களா? பாக்கியவை கலாய்த்த அம்ரிதா.! 1
இந்த சண்டைகள் ஒருபுறம் இருக்க, தனது இளைய மகன் எழில் காதலித்து வரும் அமிர்தா என்கிற பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். வீடை காலி செய்யும்படி தந்தை கோபி தொந்தரவு கொடுத்து வரும் நிலையில், எழில் நான் அந்த பணத்தை கொடுத்து வீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் அவரால் அவ்வளவு பணத்தை திரட்ட முடியவில்லை. இதனால் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதாவது எழில் வேலை பார்த்து வரும் தயாரிப்பாளரின் மகளை திருமணம் செய்து கொண்டால் அந்த பணத்தை எழிலுக்கு தருவதாக அந்த தயாரிப்பாளர் உறுதி அளித்திருந்தார். இதனால் கட்டாய திருமணத்தின் பெயரில் தயாரிப்பாளரின் மகளை திருமணம் செய்து கொள்ள எழில் சம்மதித்திருந்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் பாக்யா எழிலுக்கும் தயாரிப்பாளர் மகளுக்கும் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி, எழில் காதலித்து வந்த அமிர்தாவையே அவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்.

விளம்பரம்
தொடர்புடையவை  முத்து, மீனா, மனோஜை வீட்டிற்கு அழைத்து வந்த ரோஹிணியின் மகன்.! மாட்டப்போகும் ரோஹிணி.!

உங்க ஈஸ்வரி கேட்டரிங்க்கு ஆள் பத்தலன்னு என்ன கல்யாணம் பண்ணி வச்சீங்களா? பாக்கியவை கலாய்த்த அம்ரிதா.! 3
கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஈஸ்வரி கேட்டரிங் நடத்திவரும் பாக்யாவிடம் ஒரு குக்காக நான் சேர்ந்திருப்பதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார் ரித்திகா. அந்த வீடியோவில் நீங்கள் உங்கள் மகனுக்கு என்னை கட்டி வைக்கவில்லை, உங்களுக்கு சமையலுக்கு ஒரு ஆள் தேவை என்று தானே என்னை கட்டி வைத்தீர்கள்? என்று காமெடியாக கேட்க, அப்படியெல்லாம் இல்லை என்று பாக்யா பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரின் காம்பினேஷன் மிக அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Video Below..!

விளம்பரம்

 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment