காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வந்த நடிகர் ஒருவர் தற்போது தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து திரை பிரபலங்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலை சீரியல் சற்று வித்தியாசமானது. இது தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் நடித்து வந்த நடிகர்கள் பலரும் தற்போது மாறிவிட்டனர்.

இந்த சீரியலின் கதாநாயகன் சூர்யா என்கிற கதாபாத்திரத்தில் சுவாமிநாதன் நடித்து வருகிறார். கதாநாயகியாக வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் பிரியங்கா குமார் நடித்த வருகிறார். இந்த கதையை குறித்து பார்த்தோம் என்றால், வெண்ணிலா ஒரு கல்லூரியில் படிப்பதற்காக சேர்கிறார் அங்கு அவருக்கு கல்லூரியை நடத்தி வரும் சூர்யாவுடன் காதல் மலர்கிறது. பின்னர் இவர்கள் காதல் என்ன ஆனது என்பது குறித்த கதை தான் காற்றுக்கென்ன வேலி சீரியல்.

இந்தத் தொடரில் கதாநாயகி வெண்ணிலாவின் காலேஜ் பிரண்டாக தமிழ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கானா ஹரி. இவர் ஒரு கானா பாடகராகவும், பாடல் எழுதுபவராகவும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். பின்னர் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே நடிகராக மாறினார். ஜீ தமிழில் ஒரு நாடகத்தில் இவர் எழுதிய பாடல் ஒளிபரப்பப்பட்டது. இவரே இந்த பாடலை எழுதி பாடி நடித்தும் இருந்தார். நல்ல திறமை உள்ள கலைஞரான இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் இருந்தது.

இந்த நிலையில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலாவின் தோழர்களில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலுக்கு பின்னர் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்.நல்ல காமெடி செய்யும் கதாபாத்திரம் இவருக்கு கிடைத்திருந்தது. இந்த நிலையில் நேற்று இவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். இந்த தகவல் வெளியான பின்பு பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக சீரியலில் உடன் நடித்து வரும் பிரியங்கா தனது இரங்கலை தெரிவித்து இருக்கிறார். அதேபோல வெண்ணிலாவின் நண்பர்களில் இன்னொருவராக வரும் ராகவேந்திரன் என்கிற புலியும் அவருக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். தற்கொலை எதற்கும் தீர்வாகாது, நான் பலமுறை உனக்கு அறிவுரை செய்தேன். என்னை ஏமாற்றி விட்டாய், அண்ணனை ஏமாற்றி விட்டாய், என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, திரும்பி வாடா ப்ளீஸ் என்று உருக்கமான பதிவு ஒன்றையும் போட்டு இருக்கிறார். அவரது இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்..! அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the Video Below..!
View this post on Instagram