எண்ணி இத்தன நாளுக்குள்ள ஜீவா எங்களட்ட சேந்துடுவான்..! ஜனார்த்தனிடம் சவால் விட்ட தனம்.!

வெளியிட்டது

முல்லைக்கு விரைவில் வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் மீண்டும் ஜீவா மற்றும் மீனா இருவரும் தங்கள் குடும்பத்துடன் இணைந்து விடுவார்கள் என்று ஜனார்த்தனிடம் சவால் விட்டிருக்கிறார் தனம். அந்த சவாலில் அவர் ஜெயிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ஜனார்த்தனிடம் மிக கெத்தாக பேசிவிட்டு சென்றிருக்கிறார் தனம். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை பார்க்காதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த தொடரில் இரண்டாவது தம்பியாக இருக்கும் ஜீவா குடும்பத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வீட்டிலிருந்து வெளியேறி தனது மாமனருடன் வசித்து வருகிறார். இதே போல் கடைசி தம்பி கண்ணனும் வீட்டிலிருந்து வெளியேறி தனியாக வசித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எண்ணி இத்தன நாளுக்குள்ள ஜீவா எங்களட்ட சேந்துடுவான்..! ஜனார்த்தனிடம் சவால் விட்ட தனம்.! 1
இதற்கு முன்பாக மூத்த மருமகள் தனம், மூன்றாவது மருமகள் முல்லை, நான்காவது மருமகள் ஐஸ்வர்யா என தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மருமகள்கள் அடுத்தடுத்து கர்ப்பமாகியிருந்தனர். இந்த கதை அப்போது பலராலும் விமர்சிக்கப்பட்டது. அதற்கு காரணம் அறைகள் கூட இல்லாத வீட்டில் ஒரே ஹாலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த அவர்களுக்கு எப்படி ஒரே சமயத்தில் கர்ப்பமாக முடியும்? என்றும், இந்த கதை போகும் போக்கு சரி இல்லை என்றும் பலரும் விமர்சித்திருந்தனர். எனவே கதையின் சுவாரசியத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தற்போது கதையை மாற்றி இருக்கின்றனர். அதில் இத்தனை நாள் இந்த குடும்பத்திற்காக மாடு போல் உழைத்து வந்த ஜீவா குடும்பத்தினரால் காசு இல்லை என்று அசிங்கப்படுத்தப்படுகிறார். இந்த கோபம் ஒரு நாள் உச்சத்திற்கு சென்று அவர் தனது அண்ணன் தம்பிகளுடன் சண்டை போட்டு குடும்பத்தில் இருந்து வெளியேறி தற்போது தனது மாமனாருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முல்லைக்கு இது ஆறாவது மாதம். எனவே ஏழாவது மாத வளைகாப்பு நடத்த வேண்டும் என்று முல்லையின் தாயார் விருப்பப்படுகிறார். இந்த செய்தியை ஜீவாவிடம் சொல்வதற்காக தனம் ஜீவாவின் மாமனார் வீட்டிற்கு வருகிறார். அப்போது ஜீவாவின் மாமனார் ஜீவாவை எங்களிடமிருந்து பிரித்து கூட்டிச் செல்லும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். இனிமேல் உங்களுடன் ஜீவா வரவே மாட்டார் என்று கூறுகிறார். அதற்கு பதில் அளிக்கும் தனம் எங்களை விட்டு பிரிந்து ஜீவாவால் சில நாட்கள் கூட இருக்க முடியாது, விரைவில் ஜீவா எங்களுடன் வந்து குடும்பம் ஒன்றாக இணையும் என்று கெத்தாக பேசுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்