செம்ம கெத்தாக புது பேக்டரியை தொடங்கிய தமிழ்.! கோதையை ரிப்பன் வெட்ட வைத்து மாஸ் காட்டும் தமிழ்..!

தமிழும் சரஸ்வதியும் சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தமிழ் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது தனது ஃபேக்டரியை திறந்து வைத்துள்ளார். அந்த திறப்பு விழாவிற்கு தற்போது கோதை வருகை தந்திருக்கிறார். அவருடன் சேர்த்து அமைச்சர் ஒருவரும் வருகை தந்திருக்கிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. தனது ஃபேக்டரிக்கு அவர் என்ன பெயர் வைத்திருப்பார் என்று எதிர்பார்ப்புடன் அந்த ப்ரோமோ நிறைவடைந்து இருக்கிறது. தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழின் தாயார் கோதை பல வருடங்களாக கோதை இண்டஸ்ட்ரீஸ் என்கிற ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பற்றி அறிமுகமே தேவையில்லை. துறையில் இருக்கும் அனைவருக்கும் இவர்களது நிறுவனம் பரீட்சியமானது. இத்தனை நாள் கோதையின் இரண்டு மகன்கள் ஆன தமிழ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவருமே இந்த நிறுவனத்தை கவனித்து வந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செம்ம கெத்தாக புது பேக்டரியை தொடங்கிய தமிழ்.! கோதையை ரிப்பன் வெட்ட வைத்து மாஸ் காட்டும் தமிழ்..! 1
ஆனால் வீட்டிற்குள் அர்ஜுன் என்கிற கதாபாத்திரம் உள்ளே புகுந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. பழைய குடும்பப் பகையை மனதில் வைத்து உள்ளே போகும் அர்ஜூன் தமிழின் தங்கையான ராகினியை காதல் வலையில் விழ வைத்து அவரை திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் வீட்டிற்குள் வரும் அர்ஜூன் எப்படியாவது இந்த குடும்பத்தை பிரித்து விட வேண்டும் என்று சொல்லி கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். அதில் முதல் படியில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். தமிழ் தன்னை ஆள் வைத்து கத்தியில் குத்தி விட்டதாக பொய் சொல்லி நாடகமாடி தமிழை குடும்பத்திலிருந்து பிரிக்கிறார். இதனால் கோபமான தமிழின் தாய் கோதை அவரை வீட்டிலிருந்து வெளியே அனுப்புகிறார். சாப்பாட்டிற்கே வழியில்லாமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் தமிழ் இருக்கிறார். இதனால் சரஸ்வதி குடும்ப பாரத்தை குறைக்க மெக்கானிக் ஷாப்பிற்கு சென்று வேலை பார்த்து வருகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  மக்களே நாங்க எல்லாரும் ஹைதராபாத் பாவனி வீட்டுக்கு போறோம் | Trip to Hyderabad with BiggBoss Friends

செம்ம கெத்தாக புது பேக்டரியை தொடங்கிய தமிழ்.! கோதையை ரிப்பன் வெட்ட வைத்து மாஸ் காட்டும் தமிழ்..! 3

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தமிழ் கஷ்டப்பட்டு லேத்து பட்டறை ஆர்டர் ஒன்றை பிடிக்கிறார். தற்போது இந்த புது ஃபேக்டரியின் திறப்பு விழாவிற்கு தனது தாயார் கோதை, தந்தை என அனைவரையும் அழைத்திருக்கிறார் தமிழ். கோதை அமைச்சருடன் வந்து இந்த விழாவில் கலந்து கொள்கிறார். இந்த விழாவின் திறப்பு விழாவை ரிப்பனை கட் செய்து பெயர் பலகையை திறந்து வைக்கிறார் கோதை. ஆனால் அவர் பட்டறைக்கு என்ன பெயர் வைத்திருப்பார் என்று தெரியவில்லை. அந்த சஸ்பென்சுடன் ப்ரோமோ முடிகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment