தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தரா வயிற்றில் குழ்ந்தையுடன் கீழே வழுக்கி விழுந்து விடுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விஜய் டிவியில் இரவு ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் படிக்காத சரஸ்வதியை தடைகளை மீறி மணந்து கொள்கிறார் ஹீரோ தமிழ். இந்த விஷயம் ஹீரோவின் தாய் கோதைக்கு தெரிய வருகிறது. பின்னர் கோதையிடம் சவால் விட்டு தனது மனைவியை சரஸ்வதியை படிக்க வைத்து தேர்வில் வெற்றி பெற வைக்கிறார் தமிழ். இப்படியாக ஆரம்பித்த இந்த கதை பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. தமிழின் தம்பியாக கார்த்திக்கும் தம்பி மனைவியாக வசுந்தராவும் நடித்து வருகின்றனர். தற்போது வசந்தரா கர்ப்பமாக இருக்கிறார். மேலும் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து முழுமையாக பார்க்கலாம்.

நேற்றைய எபிசோடில் வசுந்தராவிற்கு குழந்தை உருவானால் தான் முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து வருவதாக வேண்டி இருந்தார் சரஸ்வதி. அதேபோல் வசுந்தராவிற்கும் குழந்தை உருவாகி உள்ளது. இதனால் வசுந்தராவிடம் கோவிலுக்கு செல்லலாம் என்று சரஸ்வதி அழைக்கிறார். அதனால் வசுந்தரா தனது கணவர் கார்த்திக்கிடம் சென்று நானும் சரஸ்வதியும் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றி விட்டு வருகிறோம் என்று கூறுகிறார். ஆனால் கார்த்திக்கோ முதல் மூன்று மாதங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். அதனால் நீ வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. மருத்துவ பரிசோதனைக்கு மட்டுமே நீ வீட்டை விட்டு வெளியேற வேண்டும். வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் நீ ஓய்வெடுக்க வேண்டும் என்று கார்த்தி கூறுகிறார். இடையில் குறிக்கிட்ட சரஸ்வதியையும் கார்த்திக் திட்டி வசு வரமாட்டாள், நீங்கள் வேண்டுமானால் போய் உங்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றிக் கொள்ளுங்கள் என்று கோபமாக கூறிவிடுகிறார்.

ஆனால் வசுந்தரா கார்த்திக்கின் பேச்சை மீறி சரஸ்வதி உடன் கோவிலுக்கு செல்கிறார். இன்றைய எபிசோடில் இதிலிருந்து தொடங்குகிறது. கோவிலுக்கு சென்ற வசுந்தராவிற்கு கார்த்திக் போன் செய்து பேசுகிறார். அப்போது, தான் இன்றைக்கு அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வீட்டிற்கு வந்து விடுவேன் என்று கூறுகிறார். ஆனால் வசந்தராவோ இல்லை வீட்டிற்கு வரவேண்டாம் என்று கூறுகிறார். இப்படியே போன் பேசிக் கொண்டிருக்கும்போது சரஸ்வதி வசுந்தராவை பத்திரமாக கவனித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் திடீரென இருவர் வந்து சரஸ்வதி இடம் பேச்சு கொடுக்க பேச்சு மும்முரத்தில் வசுந்தராவை அவர் மறந்துவிட்டார். வசுந்தராவும் போன் பேசிக்கொண்டே நடந்து போய் கீழே கொட்டிக் கிடந்த கோவில் பிரசாதத்தில் கால் வைக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக வழுக்கி கீழே விழுந்து மயக்கம் அடைகிறார் வசுந்தரா. போனின் எதிர் முனையில் இருந்த கார்த்திக்கு என்ன ஆனது என்று தெரியாமல் கதறி அழுது கொண்டிருக்கிறார்.

அப்போது சரஸ்வதி தமிழுக்கு போன் செய்து வசுந்தரா வழுக்கி விழுந்து மயக்கம் ஆகிவிட்டார், மருத்துவமனையில் அனுமதிக்க போகிறேன் என்று கூறுகிறார். பின்னர் அனைவரும் மருத்துவமனைக்கு வருகின்றனர். அங்கு அனைவரும் சரஸ்வதியை திட்டி தீர்த்து வருகின்றனர். கார்த்திக் பேசும் பொழுது படிக்காத நீங்கள் எல்லாவற்றிலும் அரை வேக்காடாக இருக்கிறீர்கள். உங்களை யார் வசுவை கோவிலுக்கு அழைத்துச் செல்ல சொன்னது என்று கார்த்திக் கேட்கிறார். மேலும் கோதை, சந்திரகலா என அனைவரும் சரஸ்வதியை திட்டுக்கின்றனர்.

வசுவின் தாய் சந்திரகலா சொல்லும் பொழுது இவளுக்கு வசு மீது பொறாமை அதனால் தான் வேண்டும் என்றே அவள் கர்ப்பத்தை கலைக்க இவ்வாறு செய்துள்ளார் என்று கூறினார். ஆனால் வெளியே வந்த மருத்துவ வசுவிற்கு எதுவும் ஆகவில்லை குழந்தையும் நன்றாக இருப்பதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அனைவரும் உள்ளே சென்று வசுவை நலம் விசாரிக்க செல்கின்றனர்.

ஆனால் சரஸ்வதி மட்டும் உள்ளே செல்லவில்லை. வசு சரஸ்வதியை தேடிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடை முடிவடைந்து விட்டது. உண்மையில் நடந்தது என்ன என்பதை வசு வீட்டாரிடம் கூறி, சரஸ்வதிக்கு ஆதரவாக அனைவரையும் சமாதானப்படுத்துவார் என்றே தெரிகிறது.