பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இத்தனை நாள் தனத்திற்கு கேன்சர் என்ற செய்தியை மறைத்து வைத்திருந்த நிலையில், அதை ஒரு வீடியோவாக எடுத்து தனது youtube சேனலில் போட்டு ஊர் முழுக்க பரப்பி விட்டார் ஐஸ்வர்யா. இந்த வீடியோவை பார்த்துவிட்டு மூர்த்தி ஐஸ்வர்யாவிடம் கேள்வி எழுப்பிய நிலையில், தற்போது உண்மைகளை போட்டு உடைத்திருக்கிறார். அந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூத்த மருமகளாக இருக்கும் தனத்திற்கு கேன்சர் இருப்பதை மறைத்து அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மையை மற்ற மருமகள்களாக இருக்கும் மீனா, முல்லை ஆகியோர் வீட்டில் இருந்த ஆண்களிடம் மறைத்து அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்து முடித்து இருந்தனர். தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் கடைசி மருமகளாக இருக்கும் ஐஸ்வர்யா தனது youtube சேனலில் கன்டென்டுக்காக வீடியோ ஒன்றை ரெக்கார்ட் செய்து கொண்டிருக்கிறார் .அப்போது புற்றுநோய் என்பது எவ்வளவு கஷ்டமான ஒரு விஷயம் தெரியுமா? எங்கள் வீட்டில் உள்ள ஒருவருக்கே புற்றுநோய் இருக்கிறது என்று வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த மூர்த்தி தற்போது வீட்டுக்கு வந்து யாருக்கு புற்றுநோய் இருக்கிறது என்று கேள்வி கேட்க தொடங்குகிறார்.
அதைப் பார்த்த மீனாவின் தாயார் மீனாவிடமும், முல்லையின் தந்தை முல்லையிடமும் சென்று விசாரிக்க தொடங்குகின்றனர். ஆனால் ஐஸ்வர்யா தனத்துக்கு தான் கேன்சர் என்கிற உண்மையை போட்டு உடைத்து விடுகிறார். இதனால் மூர்த்தி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television