விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனா செந்திலிடம் எங்கேயாவது அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்கிறார். அதற்கு பாண்டியன் படத்திற்கு டிக்கெட் எடுத்துட்டு வந்து கொடுத்து படத்திற்கு செல்லுமாறு கூறுகிறார். மேலும் வீட்டில் செய்த முறுக்கு, அதிரசம் ஆகியவற்றை பார்சல் செய்து அனுப்புகிறார். அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1’ கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ எடுக்கப்பட்டு வருகிறது. முதல் சீசன் அண்ணன் தம்பிகளின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் பாகம் தந்தை மற்றும் மகன்களுக்கு இடையே இருக்கும் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டாவது மகனாக இருக்கும் செந்தில் மீனாவை காதலித்து வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் பாண்டியனுக்கு கோபம் வருகிறது. இதற்கு காரணமாக இருந்த மூன்றாவது தம்பி கதிரை வீட்டை விட்டு அடித்து துரத்துகிறார். ஆனால் தற்போது கதிரை மீண்டும் அவரது தாயார் வீட்டுக்கே அழைத்து வந்து வருகிறார். அனைவரும் ஒன்றாக வாழத் தொடங்கி இருக்கின்றனர் இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் திருமணமான பின்பு செந்தில் தன்னை எங்குமே அழைத்துச் செல்லவில்லை என்பதால் படத்திற்கு அழைத்துச் செல்லுமாறு மீனா கேட்கிறார்.
அதற்கு பாண்டியன் அறுபது ரூபாய்க்கு முதல் வரிசை டிக்கெட்டை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து இதில் படத்திற்கு செல்லுமாறு கூறுகிறார். மேலும் வீட்டில் செய்த முறுக்கு, அதிரசத்தை எடுத்துக்கொண்டு படத்திற்குச் செல்லுமாறு கூறுகிறார். செந்திலும் பாண்டியனிட் பேச்சை அப்படியே கேட்கிறார். இதனால் மீனா அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television