விசித்ராவை கலாய்த்து சிரிக்கும் மாயா பூர்ணிமா.! கோர்த்துவிட்ட கமல்.! காண்டான விச்சு

பிக் பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான கடைசி ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஹவுஸ் மேட்ஸைப் பார்த்து கமலஹாசன் உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு ஒரு டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார். அதில் ஒவ்வொருவரும் தனக்கு இந்த குணம் அதிகமாக இருப்பதாக கூறிக் கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 இறுதிக் கட்டங்களை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகிறது. கடந்த வாரம் மிட் வீக் எலிமினேஷன் என்று சொல்லி அனன்யா வெளியே நிலையில், நேற்று கூல் சுரேஷ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விசித்ராவை கலாய்த்து சிரிக்கும் மாயா பூர்ணிமா.! கோர்த்துவிட்ட கமல்.! காண்டான விச்சு 1

விளம்பரம்

இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் உங்கள் குணாதிசயங்கள் குறித்து கூறுமாறு கமல் கூற விஷ்ணு தன்னிடம் நிறைய அன்பு இருப்பதாக கூறுகிறார். அன்பை காட்டிவிட்டால் பின்னர் அவர்களுடன் சண்டை போட முடியாது என்று கூறுகிறார். பின்னர் விசித்ரா தன்னிடம் சகிப்புத்தன்மை நிறைய இருப்பதாக கூறுகிறார். அதை கேட்கும் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் சிரிக்கின்றனர். இதனால் விசித்ராவின் முகம் மாறுகிறது. பின்னர் ரவீனா தனக்கு வன்மம் அதிகமாக இருப்பதாக கூறுகிறார். வன்மம் இருந்தால் தான் இந்த வீட்டில் நிலைக்க முடியும் என்று அவர் பேசுகிறார்.

தொடர்புடையவை  மங்களூருவில் மச்சினிச்சி வீட்டில் நடந்த கறி விருந்து.. ஸ்ரேயாவின் சொந்த ஊரில் கலாட்டா செய்த சித்து

விசித்ராவை கலாய்த்து சிரிக்கும் மாயா பூர்ணிமா.! கோர்த்துவிட்ட கமல்.! காண்டான விச்சு 3
அப்போது பேசும் கமலஹாசன், “நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வாழ்க்கையில் வண்ணம் தேவையான ஒன்று என்பது போல் இருக்கிறது என்று கூறுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment