விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ ஆகிய இரு தொடர்களின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது ராஜிக்கும், கதிருக்கும் திருமணம் செய்து வைக்க கோமதி ஏற்பாடுகளை செய்து வைக்கிறார். கதிரின் காலில் விழுந்து கதறி அழும் கோமதி, “தன்னுடைய அண்ணன் குடும்பத்தின் மானத்தை காப்பாற்ற ராஜியை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று கதறி அழுது கொண்டிருக்கிறார். பாக்யாவும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து ராஜியிடம் சென்று பேசிக்கொண்டு இருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாண்டியனின் மனைவியாக இருக்கும் கோமதி தனது அண்ணன் மகள் திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்கிற கோபத்தில் திருச்செந்தூருக்கு வந்திருக்கிறார். அங்கு சமையல் ஆர்டருக்காக வரும் பாக்யாவுக்கும் அவருக்கும் நட்பு ஏற்பட்டு பாக்யாவின் சமையலுக்கு உதவி கொண்டிருக்கிறார். அந்த சமயம் ஊரிலிருந்து திருமணம் பிடிக்காமல் தனது காதலனுடன் கோமதியின் அண்ணன் மகள் ராஜி திருச்செந்தூருக்கு கிளம்பி வந்து கோமதி இருக்கும் லாட்ஜிலேயே தங்குகிறார். ஆனால் ராஜியின் காதலன் கண்ணன் நகைகளை பிடுங்கி விட்டு ராஜியை அறையில் தனியாக விட்டுவிட்டு ஓடிவிடுகிறார். தற்போது இந்த உண்மைகள் அனைத்தும் கோமதிக்கு தெரிய வருகிறது.
தன்னுடைய அண்ணன் குடும்பத்தின் மானத்தை காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால் தனது மகன் கதிருக்கு அவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கோமதி முடிவெடுக்கிறார். பாக்யாவும் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். இருவரும் இணைந்து தற்போது ராஜியிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். மேலும் கோமதி கதிரின் காலில் விழுந்து தனது அண்ணன் மகள் ராஜிக்கு வாழ்க்கை தருமாறு கதறி அழுது கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television