“ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் என்ன வித்தியாசம்?” ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ படத்தின் ட்ரைலர் இதோ.!

‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்திருக்கும் ‘மங்கை’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை குபேந்திரன் காமாட்சி இயக்கியிருக்கிறார். ‘கயல்’ படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் ஆனந்தி. எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களைக் கவர்ந்த இவர், தொடர்ந்து ‘பரியேறும் பெருமாள்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘சண்டி வீரன்’, ‘ராவணக் கோட்டம்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் என்ன வித்தியாசம்?" 'கயல்' ஆனந்தி நடிக்கும் 'மங்கை' படத்தின் ட்ரைலர் இதோ.! 1
தற்போது இவர் இயக்குனர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘மங்கை’ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தில் துஷி, ராம்ஸ், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஜே எஸ் எம் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது ட்ரெய்லர் வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். பெண்கள் மீதான அத்துமீறலை வெளிப்படுத்தும் விதமாக இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

விளம்பரம்

"ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் என்ன வித்தியாசம்?" 'கயல்' ஆனந்தி நடிக்கும் 'மங்கை' படத்தின் ட்ரைலர் இதோ.! 3
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த ட்ரெய்லரை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment