கதிர் – ராஜிக்கு நடந்து முடிந்த திருமணம்.! தலைமையேற்று நடத்தி வைத்த பாக்யா.! ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ ஆகிய தொடர்களின் மகா சங்கமம் தற்போது நடந்து வருகிறது. இதில் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யா தலைமையில் கதிர் மற்றும் ராஜியின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இவர்கள் இருவரையும் குன்னக்குடி ஊரில் கொண்டு வந்து விடுமாறு கோமதி தற்போது பாக்யாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கதிர் - ராஜிக்கு நடந்து முடிந்த திருமணம்.! தலைமையேற்று நடத்தி வைத்த பாக்யா.! ப்ரோமோ இதோ.! 1

கோமதியின் அண்ணன் மகளாக இருக்கும் ராஜி தனக்கு நடக்கும் திருமண ஏற்பாடுகள் பிடிக்காமல் காதலன் கண்ணனுடன் வீட்டை விட்டு ஓடி வருகிறார். அவர் தனது அத்தை திருச்சந்தூரில் தங்கி இருக்கும் அறையிலேயே ரூம் எடுத்து தங்குகிறார். ஆனால் கண்ணன் நகைகளை எல்லாம் பிடுங்கிக் கொண்டு ராஜியை நடுத்தெருவில் விட்டுவிட்டு செல்கிறார். இந்த விஷயம் தற்போது கோமதிக்கு தெரியவந்து தனது மகன் கதிரையே ராஜிக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் அதை தன் தலைமையில் செய்யாமல் அங்கு சமையல் ஆர்டருக்கு வந்த பாக்யா தலைமையில் செய்து வைக்க முடிவெடுக்கிறார்.


இந்த நிலையில் கதிர் மற்றும் ராஜி இருவருக்கும் திருமணம் நடந்து முடிகிறது. பாக்யா தலைமையில் கோவிலில் திருமணம் நடந்து முடிகிறது. இவர்கள் இருவரையும் எங்கள் வீட்டில் வந்து விடுங்கள் என்று கோமதி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பாக்யாவும் குன்னக்குடிக்கு கிளம்புகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்