‘லால் சலாம்’ படம் எப்படி இருக்கிறது? படம் நல்லா இருக்கா? இல்லையா? பொதுமக்கள் கூறிய கருத்து என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லால் சலாம்’ திரைப்படம் பற்றி தற்போது ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். பலரும் இந்து முஸ்லிம் ஒற்றுமை குறித்து எடுக்கப்பட்ட படம் தான் இது என்று விமர்சனங்களை கூறி வருகின்றனர். மேலும் முதல் பாதி எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக இல்லை, மிகவும் போர் அடித்தது என்றும், இரண்டாவது பாதியில் ஏதோ கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்ததாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'லால் சலாம்' படம் எப்படி இருக்கிறது? படம் நல்லா இருக்கா? இல்லையா? பொதுமக்கள் கூறிய கருத்து என்ன? 1
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் தான் ‘லால் சலாம்’. இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் தனது தந்தை ரஜினிகாந்தை கேமராலில் நடிக்க வைத்திருந்தார் ஐஸ்வர்யா. மொய்தின் பாய் என்கிற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் தோன்றும் காட்சிகள் ட்ரெய்லரில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனவே படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இன்று படம் தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இது குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  மனைவியுடன் தீபாவளியை கொண்டாடிய நடிகர் ஹரிஷ் கல்யாண்..! வைரலாகும் செம்ம கியூட்டான புகைப்படங்கள்..!

'லால் சலாம்' படம் எப்படி இருக்கிறது? படம் நல்லா இருக்கா? இல்லையா? பொதுமக்கள் கூறிய கருத்து என்ன? 3

படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்கள் பலரும் படம் நன்றாக இருந்ததாக கூறினர். சிலர் முதல் பாதி எப்போது முடியும் என்று ஆகிவிட்டது. இரண்டாவது பதில் நன்றாக இருந்தது. ஆனால் வழக்கமான சாதி, மதம் குறித்த கதையாக தான் இது இருந்தது என்று கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Thi Cinemas

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment