ரவுடி என தெரியாமல் கார் ஓட்டுநர் வேலையில் அமர்த்திய பிக்பாஸ் பிரபலம்.! கடைசியில் நடந்த சங்கடம்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகை ஷெரீனா தற்போது காவல் நிலையத்தில் தனது டிரைவர் குறித்து புகார் ஒன்றை அளித்திருக்கிறார். ரவுடி என தெரியாமல் டிரைவர் வேலைக்கு வைத்துவிட்டு தற்போது தவித்து வருகிறார் ஷெரீனா. கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர், பெங்களூரில் மாடலாக வேலை பார்த்து வந்தார். மேலும் ‘சாய்ராம் மோட்டார்ஸ்’ என்கிற ஒரு நிறுவனத்தையும் நடத்தி வந்தார். அதன்பின்னர் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு ‘யுவிஐ ஸ்டுடியோஸ்’ என்கிற நிறுவனத்தையும் நடத்தி வந்தார். பல அழகி போட்டிகளில் கலந்துகொண்டு பட்டமும் பெற்றிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரவுடி என தெரியாமல் கார் ஓட்டுநர் வேலையில் அமர்த்திய பிக்பாஸ் பிரபலம்.! கடைசியில் நடந்த சங்கடம்.! 1
இவர் சமுத்திரகனியின் நடிப்பில் வெளியான ‘வினோதயா சித்தம்’ என்கிற படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். அந்த படத்திற்கு பின்னர் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் அவரது கார் ஓட்டுநர் whatsapp மூலமாக அவருக்கு தொடர்ந்து ஆபாச மிரட்டல் எடுத்து வந்திருக்கிறார். இந்த விஷயம் குறித்து தற்போது ஷெரீனா காவல் நிலையத்தில் புகாராக அளித்திருக்கிறார். தொடர்ந்து ஷெரீனாவில் முன்னாள் கார் ஓட்டுனர் கார்த்திக் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஐயோ..நான் ஸ்கூல்க்கு போக மாட்டேன்..முதல் நாள் ஸ்கூலுக்கு சென்றுவிட்டு பயந்து ஓடிய ஆல்யா மகள் ஐலா

ரவுடி என தெரியாமல் கார் ஓட்டுநர் வேலையில் அமர்த்திய பிக்பாஸ் பிரபலம்.! கடைசியில் நடந்த சங்கடம்.! 3
மயிலாடுதுறையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பிரபல ரவுடி ஒருவரின் தம்பி என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரை ஓட்டுனர் பணியிலிருந்து ஷெரீனா நீக்கி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்தி அவரது நண்பர்களுடன் இணைந்து கொண்டு ஷெரீனாவிற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்திருக்கிறார். தற்போது இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் ஷெரீனாவில் புகாரை ஏற்ற போலீசார், கார்த்திக் உட்பட இருவரை கைது செய்து இருக்கின்றனர். அந்த செய்தியை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Polimer News

விளம்பரம்

Leave a Comment