தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தில் நாயகனாக நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து சினிமாவில் வெற்றிபெற நினைத்த இவருக்கு கிடைத்தது தோல்விகள் மட்டுமே. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட பின்னர், மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து இவர் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பியர் பிரேமா காதல் என தொடர்ந்து ஹிட் அடிக்க தொடங்கியது.

தற்போது முன்னணி நடிகராக சினிமாவில் உருவெடுத்து இருக்கும் இவர், அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது. இதனை தொடர்ந்து முன்னணி நடிகராக உருவெடுத்து இருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.

தற்போது இன்று தீபாவளியை முன்னிட்டு மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களை இந்த புகைப்படங்கள் பெருமளவு கவர்ந்து உள்ளது.