ஆர்ஜே பாலாஜி நடிக்கும் “Happy Ending” படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியது..!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வடகறி படத்தில் அறிமுகம் ஆகியவர் ஆர்ஜே பாலாஜி. ஆரம்பத்தில் ரேடியோவில் ஆர்ஜே வாக பணியாற்றிய இவர் தற்போது சினிமாவில் இயக்குனர் மற்றும் நாயகனாக ஜொலித்து வருகிறார். எல்கேஜி படத்தினை இயக்கி நடித்து சினிமாவில் பெரும் வரவேற்பினை பெற்று இருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. மேலும் நயன்தாராவை வைத்து இவர் எடுத்த மூக்குத்தி அம்மன் படமும் ஹிட் கொடுத்து இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ஜே பாலாஜி நடிக்கும் "Happy Ending" படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியது..! 1

விளம்பரம்

தற்போது இவர் நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இவருக்கு கதாநாயகனாக அடுத்து சொர்க்கவாசல் திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஆர்ஜே பாலாஜி, செல்வராகவன், நட்டி என பலர் நடித்து உள்ளனர்.

ஆர்ஜே பாலாஜி நடிக்கும் "Happy Ending" படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியது..! 3

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் அம்மமுத்து சூர்யாவின் இயக்கத்தில் ஹேப்பி எண்டிங் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டு உள்ளது. டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் படத்திற்கு ஆவலாக காத்திருப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடையவை  என்னால என்ன பண்ணமுடியும்னு கேக்குறீங்களே..! திருமண சர்ச்சை..! விளக்க வீடியோ வெளியிட்ட நடிகர் Nepoleon மகன்..!

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

விளம்பரம்

Leave a Comment