பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் என்கிற சீரியலில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தற்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிந்து வருகிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நடிகர் சஞ்சீவ் சீரியலில் இருந்து பாதியிலேயே விலகிய நிலையில், தற்போது வெங்கட் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து தற்போது தனது சொந்த பெயரே மறந்து ஜீவாவாகவே வாழ்ந்து வருபவர் நடிகர் வெங்கட் ரங்கநாதன். இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு என்கிற சீரியலும், ஜீ தமிழில் ஒளிபரப்பான மெல்ல திறந்தது கதவு போன்ற நாடகங்களிலும் நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நாடகம் என்று சொன்னால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். 4 அண்ணன் தம்பிகளின் கூட்டுக் குடும்பத்தின் கதையில் இவர் இரண்டாவது தம்பியாக நடித்து வந்தார். தற்போது கதைப்படி தன்னுடைய சொந்த அண்ணன் தம்பிகளாலேயே பணம் சம்பாதிக்க வில்லை என்று சொல்லி அசிங்கப்படுத்தப்படுகிறார் ஜீவா. இதனால் அண்ணன் தம்பிகளிடம் கோபித்துக் கொண்டு தற்போது தனது மாமனார் வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறார். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஜீவாவிற்கு அடுத்து ஒரு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. அதாவது ராதிகா இயக்கி வரும் கிழக்கு வாசல் என்கிற புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் வெங்கட் ரங்கநாதன். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இத்தனை நாள் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புதிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கசிந்திருக்கிறது. கிழக்கு வாசல் தொடரில் ஹீரோயினாக நடிக்கும் ரேஷ்மாவுடன் இணைந்து அவரின் பிறந்த நாளுக்காக கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் தற்போது வெங்கட் ரங்கநாதன் இந்த தொடரில் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. பலரும் வெங்கட் ரங்கநாதனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O