கோடிக்கணக்கான மக்கள் ரீல்ஸ் செய்த “மைனரு வேட்டி கட்டி” பாடலின் முழு வீடியோ song வெளியானது.!

நானி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் தசரா படத்திலிருந்து மைனரு வேட்டி கட்டி பாடல் தற்போது HD தரத்துடன் வெளியாகி இருக்கிறது. அந்த பாடல் வெளியான சில நிமிடங்களில் பலரும் அந்த பாடலை பார்த்து ரசித்திருக்கின்றனர். தமிழில் நான் ஈ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் நானி. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் இவர், தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். தற்போது அதிக அளவில் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர், சமீபத்தில் தசரா என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கேஜிஎஃப், புஷ்பா ஆகிய படங்களை காப்பியடித்து எடுக்கப்பட்டு இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தற்போது இந்த படத்தை வெற்றி படமாக படக்குழுவினர் கொடுத்திருக்கின்றனர். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வழக்கம் போல பலரின் உள்ளங்களை கவர்ந்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான மக்கள் ரீல்ஸ் செய்த "மைனரு வேட்டி கட்டி" பாடலின் முழு வீடியோ song வெளியானது.! 1
தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் உருவாகி இருந்தது. 1970 காலகட்டத்தில் தெலுங்கானா பகுதியை சுற்றி நிலக்கரி சுரங்கத்தில் நடந்த ஒரு கதையை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் சமுத்திரக்கனி டாம் சாக்கோ உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். புஷ்பா படத்தை இயக்கிய இயக்குனர் சுகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீகாந்த் ஒடேலா இந்த படத்தை இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசை என்றாலே அவரது மகள் தீ-க்கு படங்களில் பாடும் வாய்ப்பு கிடைப்பது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் அவருக்கு இந்த படத்திலும் ஒரு பாடல் ஒன்றை பாடி இருந்தார். மைனரு வேட்டி கட்டி என்கிற அந்த பாடல் உலக அளவில் ட்ரெண்டானது. பலரும் அந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  பாலாவால் பட வாய்ப்புகளை இழந்த 'சாட்டை' பட ஹீரோ.! ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை.!

கோடிக்கணக்கான மக்கள் ரீல்ஸ் செய்த "மைனரு வேட்டி கட்டி" பாடலின் முழு வீடியோ song வெளியானது.! 3
இந்தப் பாடலுக்கு ரீல்ஸ் செய்யாதவர்களே இருக்க முடியாது என்னும் அளவிற்கு பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த பாடலில் முழு வீடியோவை HD குவாலிட்டி தரத்தில் படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment