அடுத்த பிரச்சனையை கிளப்பிய ஐஸ்வர்யா.! கோபத்தில் கத்திய தனம்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டி வரும் நிலையில், தற்போது அடுத்த பிரச்சனையை ஐஸ்வர்யா கிளப்பி இருக்கிறார் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தொடர்ந்து பிரச்சனை செய்யும் ஒரு நபராக நான்காவது மருமகள் ஐஸ்வர்யா இருந்து வரும் நிலையில் தற்போது புது பண பிரச்சனையை ஐஸ்வர்யா கிளப்பி இருக்கிறார். இதனால் வீட்டில் மீண்டும் சண்டை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசத்தையும், அவர்களது மனைவிகளுக்கு இடையே இருக்கும் ஒற்றுமையையும் கூட்டுக் குடும்பத்தின் அருமையை விளக்கும் விதமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடரில் கடைசி மருமகளாக இருக்கும் ஐஸ்வர்யா சற்று ஊதாரித்தனமாக இருக்கிறார். இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு கண்ணன் ஐஸ்வர்யா இத்தனை நாள் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த பிரச்சனையை கிளப்பிய ஐஸ்வர்யா.! கோபத்தில் கத்திய தனம்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ.! 1

தற்போது மீண்டும் மூத்த அண்ணன் மூர்த்தியிடமே வந்து சேர்ந்த கண்ணன் ஐஸ்வர்யா மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பிக் கொண்டே இருக்கின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஐஸ்வர்யா கஸ்தூரி அத்தாட்சியிடம் கட்டுக்கட்டாக பணம் கொடுத்து கொண்டு இருக்கிறார். இதை முல்லை பார்த்துவிட்டு அதை தனத்திடம் சென்று சொல்கிறார். இந்த வீட்டில் நடப்பது எதுவுமே தனக்கு சரியாக படவில்லை என்றும், கட்டுக்கட்டாக பணத்தை கஸ்தூரி அத்தாட்சியிடம் ஐஸ்வர்யா கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் முல்லை தனத்திடம் கூறுகிறார். இதனால் தனம் கஸ்தூரி அத்தாட்சியை அழைத்து ஐஸ்வர்யாவிற்கு ஏதும் பணம் கடன் கொடுத்திருக்கிறீர்களா? என்று கேட்கிறார் அப்போது கஸ்தூரி அத்தாட்சி வளைகாப்பிற்காக ஐஸ்வர்யா கடன் கேட்டிருந்தார், அதனால் வட்டிக்கு வாங்கி கொடுத்த விஷயத்தை போட்டு உடைத்து விடுகிறார். இதனால் கோபமான தனம் ஐஸ்வர்யாவை தற்போது அழைத்துப் பேசுகிறார்.

அப்போது கஸ்தூரியிடம் வட்டிக்கு பணம் வாங்கிய விஷயத்தை ஐஸ்வர்யா ஒப்புக்கொள்கிறார். இதனால் தனம் மிகுந்த கடுப்பில் இருக்கிறார். தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி வரும் ஐஸ்வர்யா, தற்போது அடுத்த தலைவலியாக வட்டிக்கு கடன் வாங்கி அடுத்த பிரச்சனையை கிளப்பி இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்