சமீபகாலமாக தமிழ் திரையுலகம், சின்னத்திரை, வெள்ளித்திரை, இந்திய திரையுலகம் என்று தொடர்ந்து விவாகரத்து செய்திகள் கொடி கட்டி பறந்து வருகிறது. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் அவ்வப்போது விவாகரத்தை அறிவித்து வருவது அவர்களது ரசிகர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாராக இருக்கும் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளும் நடிகையுமான நிஹாரிகா தற்போது தனது திருமண உறவை முறித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த தகவல் டோலிவுட்டில் வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிரஞ்சீவி, இவருடைய மகன் ராம் சரணும் தற்போது தெலுங்கு உலகின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனாவிற்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதை ஒட்டுமொத்த குடும்பமே கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண் தனது மூன்றாவது மனைவியாக இருக்கும் “ஆனாவை” விவாகரத்து செய்ய இருப்பதாக சில நாட்களாக தகவல்கள் கொடிகட்டி பறந்து வந்தது. ஆனால் அந்த தகவலிம் உண்மை இல்லை என்பதை பவன் கல்யாணின ஜனசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் சிரஞ்சீவியின் மற்றொரு தம்பி மகளாக இருக்கும் நடிகை நிஹாரிகா, தற்போது தனது கணவரை பிரிய இருக்கும் செய்தியை அவரே வெளியிட்டு இருக்கிறார். நடிகர் சிரஞ்சீவியின் மூத்த தம்பியை நாகேந்திர பாபு தெலுங்கு சினிமாவின் முக்கிய தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவருக்கு நிஹாரிகா மற்றும் வருண் தேஜு என்கிற இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இருவரும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்து வருகின்றனர். நிஹாரிகாவின் சகோதரர் வருணுக்கு சமீபத்தில் லாவண்யா திரிபாதி என்றவுடன் நிச்சயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது நிஹாரிகா தனது விவாகரத்து தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

நிகழ்ச்சி தொகுப்பாளியாக தன் தனது வாழ்க்கையை தொடங்கிய அவர், கடந்த 2020 ஆம் ஆண்டு ஹைதராபாத் சேர்ந்த சைதன்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டு கணவருடன் இல்லாமல் தோழிகளுடன் பாலித்தீவிற்கு சுற்றுலா சென்றார். அப்போதே இவர் தனது கணவரை பிரிந்து விட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நிஹாரிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் நானும் சைதன்யாவும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இதுவரை எங்களுக்கு ஆதரவாக இருந்த எங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாங்கள் சில தனியுரிமை கோருகிறோம். எங்களை புரிந்து கொண்டதற்கு நன்றி என்று அந்த பதிவை பதிவிட்டு இருக்கிறார். பவன் கல்யாணம் விவாகரத்து தகவலும், நிஹாரிகாவின் விவாகரத்து தகவலும் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
View this post on Instagram