முல்லைக்கு நடந்த பயங்கர விபத்து.! வயிற்றில் விழுந்த பலமான அடி.! சோகமான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கர்ப்பிணியாக இருக்கும் முல்லையை கதிரின் எதிரியாக இருப்பவர் பைக்கை வைத்து அடித்து தூக்கி இருக்கிறார். இதனால் பிள்ளைத்தாச்சியாக இருக்கும் முல்லை கீழே விழுந்து அவரது வயிற்றில் பலமாக அடிப்படுகிறது. அந்த சோகமான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்பப்பாங்கான இந்த தொடரை பார்ப்பதற்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. மூன்று ஆண்டுகளை கடந்த போதிலும் அதே வரவேற்புடன் இன்னமும் ப்ரைம் நேரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது கதைப்படி பிரிந்த அண்ணன் தம்பிகள் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். இதற்கிடையில் கடைசி தம்பி கண்ணன் மாதத் தவணையில் பல பொருட்களை வாங்கி கட்ட முடியாமல் கடனாளியாகி இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முல்லைக்கு நடந்த பயங்கர விபத்து.! வயிற்றில் விழுந்த பலமான அடி.! சோகமான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 1

கடனை திருப்பி செலுத்த முடியாததால் கண்ணனை வீடு புகுந்து அதிகாரிகள் மிரட்ட அவர்களை கதிர் அடித்து அது பெரிய பிரச்சனையானது. பின்னர் கதிரை போலீஸ் ஸ்டேஷனில் அடைத்து வைத்திருக்க, அவரை ஐந்து லட்ச ரூபாய் ஏற்பாடு செய்து, கஷ்டப்பட்டு வெளியில் மீட்டுக் கொண்டு வந்தார் மூர்த்தி. பின்னர் கண்ணனும் ஐஸ்வர்யாவும் மூர்த்தியிடமே வந்து சரணடைய தற்போது மீண்டும் அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ தொடங்கி இருக்கின்றனர். இதற்கிடையில் கதிருக்கு தனிப்பட்ட முறையில் எதிரி ஒருவர் இருக்கிறார். அவர் கதிரிடம் அடிக்கடி வம்பு செய்து கொண்டே இருக்கிறார். இந்த நிலையில் கதிரும் முல்லையும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் கதிரை பழிவாங்குவதற்காக அவர் மீது வண்டியை ஏற்றி கொலை முயற்சி செய்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக கர்ப்பிணியாக இருக்கும் முல்லை மீதும் அந்த வண்டி மோதி விடுகிறது.


இதனால் நிலைகுலைந்து போன முல்லை தவறி கீழே விழுகிறார். அவர் வயிற்றில் பலமாக அடிபட்டு விடுகிறது. இதனால் கதறி அழும் கதிர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவர் முல்லையின் கைகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் முல்லையின் கைகள் தானாக கீழே விழுகிறது. இதனால் முல்லைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, மேலும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் என்ன ஆனது என்று தெரியவில்லை. அந்த அதிர்ச்சியான ப்ரோமோவை பார்த்த பலரும் முல்லைக்கு எதுவும் ஆகக்கூடாது என்று கமெண்ட்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்