பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஜீவா தனது மாமனார் பக்கம் சரியத் தொடங்கி இருக்கிறார். அதுபோன்ற ஒரு ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. சரக்கு அடித்து விட்டு உளறிக் கொண்டிருக்கும் ஜீவா தனது மனைவி அந்த கூட்டுக் குடும்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக மாமனாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக ஜீவா தனது மாமனார் பக்கம் சாய்ந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நான்கு அண்ணன் தம்பிகளின் கதையை காட்டி வருகின்றனர். தற்போது கதைப்படி இரண்டாவது தம்பியின் மனைவி மீனாவின் அப்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை வாங்கிக் கொள்வதாக கூறி அவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டார். இதனால் உடைந்து போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மூன்றாவது தம்பி கதிரின் வீட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறது. தனித்தனி அறைகள் கூட இல்லாத அந்த வீட்டில் வசிக்கும் அவர்களின் மனைவிகள் அடுத்தடுத்து கர்ப்பமாகி இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் பல விமர்சனத்திற்கு உள்ளாகி வந்த நிலையில், தற்போது கதையில் திருப்பமாக இரண்டாவது தம்பியாக இருக்கும் ஜீவாவிற்கு பல அவமானங்கள் ஏற்படுகிறது. சம்பாதித்துக் கொண்டு வரும் அனைத்து பணத்தையும் மற்ற தம்பிகள், அண்ணன் மூர்த்தியிடம் கொடுக்க உன் பணம் எங்கே என்று கடைசி தம்பி கண்ணன் ஜீவாவிடம் கேட்டு அசிங்கப்படுத்துகிறார். அங்கிருந்து ஜீவாவிற்கு பிரச்சனை தொடங்குகிறது. மேலும் ஜீவாவின் மாமனார் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவர்களை பார்த்துக் கொள்வதற்காக அடிக்கடி ஜீவாவும், மீனாவும் அவர்கள் வீட்டிற்கு சென்று வருகிறார்கள். மீனா அவரது வீட்டில் செல்லமாக வளர்வதை பார்க்கும் ஜீவாவிற்கு தன்னுடைய வீட்டில் மீனா எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார் என்று உணர்வு ஏற்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மீனாவின் மாமனார் எப்படியாவது இவர்களை தங்கள் வசம் இழுப்பதற்காக திட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் ஜீவாவிற்கு சரக்கு வாங்கி கொடுத்து அவரை பேச வைக்கிறார் அவரது மாமனார்.
அப்போது ஜீவா தன் மனைவி தன் வீட்டில் கட்டிலில் கூட படுத்து உறங்குவதில்லை, கீழே படுத்து உறங்குகிறார். வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் அவர்தான் செய்கிறார் என்றெல்லாம் புலம்பி கொண்டிருக்கிறார். இதையெல்லாம் மீனாவின் தங்கை கணவராக இருக்கும் பிரசாந்த் தனது ஃபோனில் வீடியோவாக எடுத்து வைத்துக் கொள்கிறார். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக ஜீவா மனம் மாறி மாமனார் பக்கம் சரிந்து விடுவார் என்று தோன்றுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television