விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தொடக்கத்தில் சீரியல் கதை தடுமாறி இருந்தாலும் தற்போது வெற்றி சீரியலாக மாற்றியுள்ளார் இயக்குனர். இந்த சீரியல் வெற்றிக்கு முக்கிய காரணமே இதில் நடித்து வரும் நடிகர்கள் தங்களது சிறந்த நடிப்பினை கொடுப்பதே. தற்போது இந்த சீரியல் மிகப்பெரிய ஹிட் சீரியலாக உருவெடுத்து இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், முத்தை குடிக்க வைத்து செல்போனை எடுக்க திட்டம் போடுகிறார் ரோகிணி. அதேபோல் ரோகிணி மற்றும் மனோஜ் இருவருடைய திருமண கொண்டாட்டத்தில் முத்து குடித்து போதையாகிறார். இதனால் லிப்டில் வைத்து முத்துவின் செல்போனை ரோகிணி அவருக்கே தெரியாமல் திருடுகிறார்.

இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முத்துவின் செல்போனில் சத்யா திருடிய வீடியோ உள்ளதால் அது வெளியே வந்தால் சத்யா ஜெயிலுக்கு போக வேண்டிய நிலை ஏற்படும். இதனால் இந்த தொடரில் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது.
Embed Video Credits : VIJAY TELEVISION