ஷீலாவின் அயோக்கிய தனத்தை மனோகரிடம் போட்டு உடைத்த ஷக்தி..அதிரடி திருப்பம்

மௌன ராகம் நிகழ்ச்சியில் வருணுக்கு இவ்வளவு நாள் தவறான மாத்திரைகளை ஷீலா கொடுத்து வந்ததை சத்யா அனைவரிடம் கூறுகிறார். விஜய் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் மௌனராகம். இந்த நாடகத்தில் வரும் வருண், தருண், சத்யா, ஸ்ருதி கேரக்டர்கள் நாடகத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கின்றனர். இதில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர்தான் ரவீணா. இவருக்கு வயது 19 ஆகும். ஜில்லா படத்தில் விஜயுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். பின்னர் 2018ம் ஆண்டு ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்து பிரபலமானார். தற்போது மௌனராகம் நாடகம் மூலம் சின்னத்திரையில் நடிப்பில் அசத்தி வருகிறார். இதனால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஷீலாவின் அயோக்கிய தனத்தை மனோகரிடம் போட்டு உடைத்த ஷக்தி..அதிரடி திருப்பம் 1

விளம்பரம்

விறுவிறுப்பான கதையால் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது இந்த நாடகம். மேலும் நாடகத்தின் ப்ரோமோ வெளியாகி சில நிமிடங்களில் மில்லியன் பார்வையாளர்களை தாண்டும். தற்போது கதைப்படி வருணுக்கு நெருப்பை பார்த்தாலே பயம் ஏற்படும். ஏனென்றால் அவரது தாயார் தீ விபத்தில் இருந்திருப்பார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான வருண் பல வருடங்களாக மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார். இந்த மாத்திரைகளை அவரது அத்தை ஷீலா தான் கொடுத்து வருகிறார். ஆனால் வருணுக்கு இந்த நோய் சரியாகவே இல்லை. அதற்கான காரணத்தை சக்தியை கண்டுபிடிக்க முற்படுகிறார்.

தொடர்புடையவை  "பிற்போக்கு தனத்தின் உச்சக்கட்டம்" எதிர்நீச்சல் ப்ரோமோவை பார்த்து பயங்கர அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

ஷீலாவின் அயோக்கிய தனத்தை மனோகரிடம் போட்டு உடைத்த ஷக்தி..அதிரடி திருப்பம் 3

விளம்பரம்

அதனால் வருண் சாப்பிட மாத்திரைகளை எடுத்துக்கொண்டு மனநோய் மருத்துவரிடம் செல்கிறார். டாக்டர் கூறும் போது இந்த மாத்திரைகளை நான் வழங்கவே இல்லை. மேலும் இந்த மாத்திரைகளை உட்கொண்டால் நரம்பு மண்டலம் கூட பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக்தி தற்போது வீட்டிற்கு வந்து மனோகரிடமும் மற்ற குடும்பத்தினரிடமும் இந்த உண்மையை கூறிவிடுகிறார். இதனால் கடுப்பான மனோகர் ஷீலாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்து இந்த வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

1 thought on “ஷீலாவின் அயோக்கிய தனத்தை மனோகரிடம் போட்டு உடைத்த ஷக்தி..அதிரடி திருப்பம்”

Leave a Comment