சும்மா கடுப்பை கிளப்பாதயா..! மூர்த்தியை அடிக்க பாய்வது போல சென்ற ஜீவா.! இன்றைய ப்ரோமோ.!

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது ஜீவா தனது அண்ணன் மூர்த்தியை எதிர்த்து பேசுகிறார். காசில்லாமல் தான் தவித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் நீங்கள் கல்லா பெட்டியை பூட்டி வைத்து விட்டு போய் இருக்கிறீர்கள், நான் பூட்டி வைத்துவிட்டு ஓடிவிடுவேன் என்று பயமா என்று கேட்கிறார். இதனால் மூர்த்தி உடைந்து போய் நிற்கிறார். அதுபோன்ற ஒரு ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நான்கு அண்ணன் தம்பிகளின் கதையை காட்டி வருகின்றனர். இதில் அண்ணண் மூர்த்தி சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டு தனது தம்பிகளை வளர்த்து ஆளாக்குகிறார். தம்பிகளும் அண்ணன் பேச்சை தட்டாமல் இருந்து வருகின்றனர். மேலும் மூர்த்தியின் மனைவி தனம், மூர்த்தியின் தம்பிகள் சிறு குழந்தைகளாக இருந்ததால் அவர் குழந்தை கூட பெற்றுக் கொள்ளாமல் இவர்கள் 3 பேரையும் இத்தனை ஆண்டுகளாக வளர்த்து ஆளாக்கி இருக்கிறார். இதில் இரண்டாவது தம்பி ஜீவா காலேஜ் படித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையிலேயே வேலை பார்த்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சும்மா கடுப்பை கிளப்பாதயா..! மூர்த்தியை அடிக்க பாய்வது போல சென்ற ஜீவா.! இன்றைய ப்ரோமோ.! 1
மூன்றாவது தம்பி கதிர் பத்தாவதுடன் படிப்பை நிறுத்திவிட்டு அவரும் கடையிலேயே வேலைக்கு வந்து விட்டார். கடைசி தம்பியை மட்டும் கல்லூரியில் படிக்க வைத்து அவருக்கு தற்போது அரசாங்க உத்தியோகம் கிடைத்திருக்கிறது. தற்போது கதைப்படி இரண்டாவது தம்பியின் மனைவி மீனாவின் அப்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை வாங்கிக் கொள்வதாக கூறி அவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டார். இதனால் உடைந்து போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மூன்றாவது தம்பி கதிரின் வீட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறது. தனித்தனி அறைகள் கூட இல்லாத அந்த வீட்டில் வசிக்கும் அவர்களின் மனைவிகள் அடுத்தடுத்து கர்ப்பமாகி இருக்கின்றனர். இது தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் நாடகத்தை கேலி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து ஜீவா விலக ஆரம்பித்திருக்கிறார். ஜீவாவின் மனைவி மீனாவின் அப்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை எழுதி வாங்கி குடும்பத்தை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டார்.

ஆனால் அந்த கோபத்தை எல்லாம் மறந்து தற்போது மாமனார் உடன் நெருக்கம் காட்டி வருகிறார் ஜீவா. தனது மனைவி ஒற்றை ஆளாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து கஷ்டப்படுவதை ஜீவா மாமனாரிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார் ஜீவா. இந்த நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாதி வழியில் மீனா நின்று கொண்டிருக்க அவரை அழைத்து வருவதற்காக கடையை பாதி ஷட்டர் போட்டுவிட்டு ஜீவா சென்று விடுகிறார். திரும்பி வரும் மூர்த்தி கடையை பார்த்துவிட்டு என்ன இப்படி கடை போட்டு விட்டுப் போய் விட்டானே என்று சொல்லிக் கொண்டே வீட்டிற்கு வருகிறார்.

அப்போது அங்கு அமர்ந்திருக்கும் ஜீவாவிடம் ஏண்டா கடையை இப்படி பூட்டிவிட்டுப் பாதியிலேயே வந்துவிட்ட என்று கேட்கிறார். அதற்கு கடுப்பான ஜீவா மீனா பாதி வழியிலேயே நிற்கிறார். ஆட்டோவில் அழைத்து வர சொல்கிறீர்கள் என்னிடம் எங்கே காசு இருக்கிறது? கல்லாவை எதற்கு பூட்டி வைத்து விட்டுப் போனீர்கள் நான் எல்லா பணத்தையும் எடுத்துக் கொண்டு ஓடி விடுவேன் என்று பயந்து தானே அப்படி செய்தீர்கள் என்று மூர்த்தியை எதிர்த்து பேசுகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் உறைந்து போய் நிற்கின்றனர். இத்தனை நாள் பாசம் காட்டி வளர்த்த தம்பி இப்படி தன்னையே எதிர்த்து பேசுகிறானே என்று சொல்லி மூர்த்தி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்