ஜீவாவை கழட்டி விட்டு மொய் செய்த அண்ணன் தம்பிகள்..! ஜீவாவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!

வெளியிட்டது

மீனாவின் தங்கை திருமணத்திற்கு அண்ணன் தம்பிகள் அனைவரும் சேர்ந்து மொய் வைப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அது நடக்கவில்லை. ஜீவா தொடர்ந்து அசிங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நான்கு அண்ணன் தம்பிகளின் கதையை காட்டி வருகின்றனர். இதில் அண்ணண் மூர்த்தி சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டு தனது தம்பிகளை வளர்த்து ஆளாக்குகிறார். தம்பிகளும் அண்ணன் பேச்சை தட்டாமல் இருந்து வருகின்றனர். மேலும் மூர்த்தியின் மனைவி தனம், மூர்த்தியின் தம்பிகள் சிறு குழந்தைகளாக இருந்ததால் அவர் குழந்தை கூட பெற்றுக் கொள்ளாமல் இவர்கள் 3 பேரையும் இத்தனை ஆண்டுகளாக வளர்த்து ஆளாக்கி இருக்கிறார். இதில் இரண்டாவது தம்பி ஜீவா காலேஜ் படித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையிலேயே வேலை பார்த்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீவாவை கழட்டி விட்டு மொய் செய்த அண்ணன் தம்பிகள்..! ஜீவாவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..! 1

மூன்றாவது தம்பி கதிர் பத்தாவதுடன் படிப்பை நிறுத்திவிட்டு அவரும் கடையிலேயே வேலைக்கு வந்து விட்டார். கடைசி தம்பியை மட்டும் கல்லூரியில் படிக்க வைத்து அவருக்கு தற்போது அரசாங்க உத்தியோகம் கிடைத்திருக்கிறது. தற்போது கதைப்படி இரண்டாவது தம்பியின் மனைவி மீனாவின் அப்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை வாங்கிக் கொள்வதாக கூறி அவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டார். இதனால் உடைந்து போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மூன்றாவது தம்பி கதிரின் வீட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறது. தனித்தனி அறைகள் கூட இல்லாத அந்த வீட்டில் வசிக்கும் அவர்களின் மனைவிகள் அடுத்தடுத்து கர்ப்பமாகி இருக்கின்றனர். இது தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் நாடகத்தை கேலி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து ஜீவா விலக ஆரம்பித்திருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீனாவின் தங்கை திருமணத்திற்கு மொய் வைக்கும் ஆலோசனை போய் கொண்டிருக்கிறது. ஜீவா அண்ணன் தம்பிகள் அனைவரும் சேர்ந்து மொய் வைப்பார்கள் என்று நினைத்து கொண்டிருக்க, கதிர், கண்ணன் ஆகியோர் தனியாக மொய் வைக்கின்றனர். இதனால் ஜீவாவுக்கு அடுத்த அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்