உனக்கு நான் முக்கியமா இல்ல உங்க அண்ணன் முக்கியமா? வீட்டை விட்டு வெளியேறும் ஐஸ்வர்யா..!

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்கனவே ஜீவா பிரச்சனை ஒரு பக்கம் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்க, தற்போது கண்ணனும் அவரது மனைவியை ஐஸ்வர்யாவும் புது பிரச்சினையை கிளப்பி இருக்கின்றனர். அவர்கள் இருவரும் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து வெளியேறுவார்கள் என்று தெரிகிறது. நான்கு அண்ணன் தம்பிகளின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. அதில் இரண்டாவது தம்பியாக இருக்கும் ஜீவா, தான் குடும்பத்தினரால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுவதாக கூறி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றிருக்கிறார். இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணமாக இருப்பது ஜீவா மனைவியாக இருக்கும் மீனாவின் தங்கை திருமணம் தான். இந்த திருமணத்திற்காக மொய் வைக்கும் பிரச்சினையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பிரச்சனை மிக பூதாகரமாக வெடித்திருக்கிறது. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உனக்கு நான் முக்கியமா இல்ல உங்க அண்ணன் முக்கியமா? வீட்டை விட்டு வெளியேறும் ஐஸ்வர்யா..! 1
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலேயே ஜீவாவும் கண்ணனும் தான் கல்லூரி வரை சென்று படித்தவர்கள். இதில் கண்ணன் வங்கி வேலைக்கு சென்று விட ஜீவா ஆரம்பத்தில் இருந்தே குடும்ப கஷ்டம் காரணமாக தனது அண்ணனுடன் இணைந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை கவனித்து வந்தார். மூன்றாவது தம்பியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் தான் வேலை பார்த்து வந்தார். ஆனால் வீட்டில் ஏற்பட்ட சிறு பிரச்சனையால் அவர் பாண்டியன் மெஸ் என்கிற ஒரு கடையை நடத்தி வருகிறார். கண்ணனும் வங்கி வேலைக்கு சென்று விட்டதால் ஜீவா மற்றும் மூர்த்தி இருவரும் தான் கடையை கவனித்து வந்தனர். ஆனால் கடையை கவனித்துக் கொள்வதில் பல பிரச்சனைகள் இருக்கிறது, ஜீவாவிற்கு என்று தனி சம்பளம் எதுவும் கிடையாது. ஒரு ரூபாய் வேண்டுமென்றாலும் மூர்த்தியின் கைகளையே எதிர்பார்த்து இருக்கிறார் ஜீவா. இத்தனை நாள் இந்த கஷ்டங்களை எல்லாம் சகித்துக் கொண்டு வாழ்ந்து வந்த ஜீவாவுக்கு தொடர்ந்து குடும்பத்தினரால் அவமானம் ஏற்படுகிறது. இதனால் தற்போது ஜீவா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து பிரிந்து செல்கிறார்.


இந்த நிலையில் மீனாவின் தங்கை ஸ்வேதா திருமணம் வருகிறது. அந்த திருமணத்திற்கு மொய் வைக்க சொல்லி மூர்த்தி கண்ணனிடம் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை கொடுக்க, அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் பெயரில் மொய்யை வைக்காமல் மூர்த்தி மற்றும் அவரது மனைவி தனத்தின் பெயரில் தனித்தனியாக வைத்துவிட்டார். அதேபோல் கண்ணமும் ஐந்தாயிரம் ரூபாய் மொய் வைக்க, கதிரும் ஐந்தாரயிரம் ரூபாய் வைக்க, ஜீவா மற்றும் மீனாவின் பெயர் மட்டும் அந்த பட்டியலில் இல்லை. இதனால் கோபம் கொள்ளும் மூர்த்தி கண்ணனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விடுகிறார். யாரை கேட்டு இப்படி நீ வைத்தாய் என்று அவர் கோபம் கொள்கிறார் இதனால் கண்ணனின் மனைவி ஐஸ்வர்யா தற்போது கோபமடைந்து வீட்டில் சண்டை போடுகிறார்.மேலும் கண்ணன் வாங்கும் 40 ஆயிரம் சம்பளத்தில் 17,000 மட்டும் வீட்டில் கொடுத்துவிட்டு மீதியை அவர்களை வைத்துக் கொள்ளும் விஷயத்தை முல்லை வீட்டில் உள்ள அனைவரிடமும் போட்டு உடைத்து விடுகிறார். இதனால் கோபமாகும் மூர்த்தி வீட்டிலிருந்து வெளியேறும்படி கூற பிரச்சனை வெடிக்கிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்