பாக்கியலட்சுமி சீரியல் நடக்கும் அந்த வீட்டின் ஹோம் டூர் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது் பாக்கியலட்சுமி சீரியல் சூட்டிங் எவ்வாறு எடுக்கப்படுகிறது என்பதை விளக்கியும், அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறைகள் எப்படி இருக்கிறது என்பது குறித்தும் தற்போது ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறனர். இது வங்காள மொழியில் உருவான ஸ்ரீ மோயி என்கிற தொடரை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரை டேவிட் என்பவர் இயக்கி வருகிறார். நடிகை சுசித்ரா இந்த தொடரின் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சதீஷ் என்பவர் கோபி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாகவும், ரேஷ்மா பசுபுலேட்டி ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் வில்லியாகவும் நடித்து வருகின்றனர். நடிகை நேஹா, விஜே விஷால் உள்ளிடோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் கடந்த ஜூலை 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் கதை குறித்து பார்த்தோம் என்றால், இல்லத்தரசி என்பவர் அம்மாவாக, மனைவியாக, மருமகளாக பல இடங்களில் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் படும் பாட்டை சில சமயம் பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார் என அனைவரும் உதாசீனப்படுத்துகிறார்கள். அதை எல்லாம் அனுசரித்து எப்படி குடும்பத்தை குடும்பத்தலைவி நடத்துகிறார்? அவளின் சுயமரியாதையை எப்படி போராடி பாதுகாக்கிறார் என்பது குறித்த கதை தான் பாக்கியலட்சுமி தொடரில் மையக்கரு ஆகும் தற்போது கதைப்படி பாக்கியலட்சுமியின் கணவர் அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார். முதல் மனைவி பாக்கியா கேன்டீன் காண்ட்ராக்ட் ஒன்று எடுத்து அதில் தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்த கேண்டீன் காண்ட்ராக்ட் பாக்கியாவிற்கு கிடைக்கக் கூடாது என்று இரண்டாவது மனைவி ராதிகா பல வகைகளில் தொந்தரவு செய்து வருகிறார். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்க,தற்போது பாக்கியலட்சுமி சீரியல் சூட்டிங் எப்படி எடுக்கப்படுகிறது என்ற வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

தனியார் youtube சேனல் ஒன்று இந்த சீரியல் சூட்டிங் எவ்வாறு எடுக்கப்படுகிறது என்பதை மக்களுக்கு காட்டுவதற்காக ஒரு வீடியோ ஒன்றை தயார் செய்திருக்கின்றது. அதில் பாக்யா, ஜெனி, அமிர்தா, பாட்டி, தாத்தாவின் அறைகள் உட்பட வீட்டின் அனைத்தும் வீடியோவையும் எடுத்து வீடியோவாக வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோ வெளியான சில நாட்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Venus infotainment