பாண்டியன் ஸ்டோர்ஸ்ல இருந்து விலகிட்டேன்.! அதிகாரபூர்வமாக அறிவித்த காவியா.!

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து காவியா விலகுவதாக பல நாட்களாக யூகங்கள் கிளம்பி வந்த நிலையில், தற்போது instagram-மில் காவியாவே அதிகாரப்பூர்வமாக தான் பாண்டியன் ஸ்டோர்ஸிலிருந்து விலகி விட்டதாக அறிவித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை சித்ரா. இவருக்கு ஜோடியாக கதிர் என்கிற கதாபாத்திரத்தில் குமரன் நடித்து வந்தார். கதிர் முல்லை ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே இந்த நாடகத்தை பலரும் விரும்பி பார்க்கத் தொடங்கினர். இந்த நிலையில் ஒருநாள் சித்ராவுக்கு நிச்சயம் முடிந்து விட்டதாக புகைப்படங்கள் வெளியானது. பின்னர் ஒரு நாள் சித்ரா லாட்ஜில் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இது கதிருடன் சித்ரா நடிப்பது பிடிக்காமல் அவரது கணவர் ஹேம்நாத் கொலை செய்துவிட்டார் என்று சித்ராவின் பெற்றோர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்ல இருந்து விலகிட்டேன்.! அதிகாரபூர்வமாக அறிவித்த காவியா.! 1

சித்ராவின் இழப்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் அந்த நாடகத்தை பார்த்து வந்த ரசிகர்களுக்கும் பெரிய இழப்பாக இருந்தது. அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதற்கு பின்னர் பாரதி கண்ணம்மாவில் அறிவாக நடித்துக் கொண்டிருந்த காவியா முல்லையாக நடிக்க ஒப்பந்தமானார். ஆரம்பத்தில் காவியாவை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள், நாட்கள் செல்ல செல்ல அவரையும் முல்லையாக ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு முல்லை கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து வந்தார் காவியா. இந்த நிலையில் காவியாவும் சீரியலை விட்டு விலகுவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அவர் பிக்பாஸில் கலந்து கொள்ள இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் காவியா பிக்பாஸில் கலந்து கொள்ளவில்லை. தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்துடன் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் காவியா.

அதில் செப்டம்பர் 14ஆம் தேதி தனது கடைசி பாண்டியன் ஸ்டோர் ஷூட்டிங் என்று பதிவிட்டு, இந்த பயணத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் புதிய காவியாவாக யார் நடிக்க இருக்கிறார் என்ற பரபரப்பு கிளம்பிய நிலையில், சமீபத்தில் நிறைவடைந்த சிப்பிக்குள் முத்து சீரியலில் வாணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த லாவண்யா முல்லையாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் லாவண்யா முல்லையாக வரும் ப்ரோமோவை பாண்டியன் ஸ்டோர்ஸ் டீம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்