14 வயதிலேயே கெத்து காட்டும் சூப்பர் சிங்கர் பூவையார்.! சொந்தமாக கார் வாங்கி இன்ஸ்டாவில் பதிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் பூவையார். இவர் தற்போது கார் வாங்கி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து இருக்கிறார். 14 வயதே ஆகும் பூவையார் கார் வாங்கிய புகைப்படத்திற்கு கீழே பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதில் பங்கேற்ற பலரும் இன்று திரைத்துறையில் பின்னணி பாடகர்களாக வலம் வருகின்றனர். அப்படி ஒரு நபர்தான் பூவையார் என்னும் கப்பீஸ். இவர் சூப்பர் சிங்கர் ஜூனியரில் கலந்து கொண்டு பாடல்களை பாடி அசத்தினார். இவர் தொகுப்பாளினி பிரியங்காவிடம் செய்யும் சேட்டைகள் பலரையும் கவர்ந்தது.

14 வயதிலேயே கெத்து காட்டும் சூப்பர் சிங்கர் பூவையார்.! சொந்தமாக கார் வாங்கி இன்ஸ்டாவில் பதிவு 1

விளம்பரம்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை, தொடர்ந்து பார்த்து வரும் தளபதி விஜய்க்கும் பூவையாரை மிகவும் பிடித்துப் போனது. பிகில் படத்தில் ஏ.ஆர் ரகுமானிடம் பூவையாரை பாட வைக்குமாறு விஜய் பரிந்துரை செய்திருந்தார். பிகில் படத்தில் வரும் நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் பாடலை விஜய் பாடியிருக்க, அதற்கு முன்பாக வரும் அய்யய்யோ யார் ஆண்ட என்ற பகுதியை பூவையார் பாடியிருப்பார். அந்த அளவிற்கு பூவையாரை விஜய்க்கு மிகவும் பிடித்து இருந்தது. பிகில் படத்தில் மட்டுமில்லாது மாஸ்டர் படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் பூவையார் நடித்திருப்பார். அந்த அளவிற்கு விஜய்க்கு மிகவும் மனதிற்கு நெருக்கமான நபராக மாறிவிட்டார் பூவையார். இந்த நிலையில் அவர் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். அதில் புதிய காருடன் மாலைகள் எல்லாம் போட்டு அதன் பக்கத்தில் அவர் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

தொடர்புடையவை  ஹே பாக்கியா இப்பவே வீட்டை விட்டு வெளியே போடி.! ஆப்பு மேல் ஆப்பு அடிக்கும் கோபி.! உறைந்து போன பாக்கியா.!

14 வயதிலேயே கெத்து காட்டும் சூப்பர் சிங்கர் பூவையார்.! சொந்தமாக கார் வாங்கி இன்ஸ்டாவில் பதிவு 3

விளம்பரம்

இந்த புகைப்படத்தை பகிர்ந்து அவர் கூறியிருந்ததாவது, மக்களே எங்களுடைய புதிய கார். நீங்கள் இல்லையேல் நான் இல்லை. உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு எப்போதுமே இருக்கனும். அனைவருக்கும் நன்றி. இறைவனுக்கு நன்றி. எல்லா புகழும் ஆண்டவனுக்கு எனக்கு குறிப்பிட்டு பூவையார் இந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். 14 வயதிலேயே கார் வாங்கும் அளவிற்கு உயர்ந்துவிட்ட பூவையாருக்கு அவரது ரசிகர்கள் கமெண்டில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

14 வயதிலேயே கெத்து காட்டும் சூப்பர் சிங்கர் பூவையார்.! சொந்தமாக கார் வாங்கி இன்ஸ்டாவில் பதிவு 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment