பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் எப்படி எடுக்கப்படுகிறது என்பது குறித்து ஒரு வீடியோவை அந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா தற்போது வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஓட தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி இருக்கிறது. இரண்டாவது தம்பி ஜீவா பிரிந்து தனது மாமனார் உடன் சென்று விட்டார். நான்காவது தம்பி கண்ணனும் தற்போது அண்ணனை விட்டு பிரிந்து செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த தொடர் எப்படி எடுக்கப்படுகிறது என்பது குறித்த ஒரு வீடியோவை இந்தத் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒருவருக்காக விரும்பிப் பார்க்கப்படுகிறது என்று சொன்னால் அது மீனா கதாபாத்திரத்திற்காக என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மக்கள் மனங்களில் மீனா கதாபாத்திரம் ஒரு நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. மாளிகை போன்ற ஒரு வீட்டில் வாழ்ந்து வந்த ஒரு பெண், தன் கணவருக்காக பல அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டு சிறிய வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவருக்கென்று தனியாக பாத்ரூம் கூட இல்லை. இது போன்ற ஒரு கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண் தனக்கு நடக்கும் பல துன்பங்களையும் சகித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அனைத்தும் உடைந்து அந்தப் பெண்ணும் அவரது கணவரும் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். இந்த கதை தற்போது விறுவிறுப்பான கட்டங்களை எட்டி இருக்கும் நிலையில் நாடகத்தின் சூட்டிங் எவ்வாறு எடுக்கப்படுகிறது என்பதை ஹேமா தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ஹேமாஸ் டைரி என்கிற youtube சேனலை நடத்தி வரும் அவர் அந்த வீடியோவை அந்த பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில் ஷூட்டிங் நடக்கும் இடங்களுக்கு காலையில் சீக்கிரமே செல்லும் அவர் கேரவன் எப்படி தயார் ஆகிறது? ஜெனரேட்டர் எப்படி வேலை செய்கிறது? மேலும் ஷூட்டிங்கில் உணவுகள் எவ்வாறு இருக்கிறது? என்பதெல்லாம் குறித்து விளக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அங்கு பயன்படுத்தப்படும் விளக்குகள், பொருட்கள் என அனைத்தையும் சுற்றி காண்பித்தும் எப்படி சூட்டிங் எடுக்கப்படுகிறது என்பது குறித்தும் விளக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.! நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Hema’s diary