என் புள்ளையை கண்டுபிடிச்சு குடு சந்தியா..! பதட்டத்தில் உண்மையை உளறிய அர்ச்சனா..!

ராஜா ராணி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அர்ச்சனாவின் உண்மை மகளை ரவுடிகள் கடத்துகின்றனர். இதனால் அர்ச்சனா சந்தியாவிடம் குழந்தையை கண்டுபிடித்து தருமாறு கதறி அழுகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி. இது ஏற்கனவே ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 கொடுத்த வெற்றியால் தற்போது இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சரவணன் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சித்துவும், சந்தியாவாக நடிகை ஆஷா கௌடாவும் நடித்து வருகின்றனர். மனைவியின் கனவை நிறைவேற்ற போராடும் கணவனாக சித்து நடித்து வருகிறார். இனிப்பு கடை நடத்தி வரும் சரவணனுக்கு நன்கு படித்த பெண்ணான சந்தியாவை திருமணம் செய்து வைத்துவிடுகின்றனர். அவருக்கு ஐபிஎஸ் ஆக வேண்டும் என்கிற கனவு இருக்கிறது. பல தடைகளை கடந்து தற்போது ஐபிஎஸ் ஆகியிருக்கிறார் சந்தியா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என் புள்ளையை கண்டுபிடிச்சு குடு சந்தியா..! பதட்டத்தில் உண்மையை உளறிய அர்ச்சனா..! 1

விளம்பரம்

தற்போது இந்த கதையிலிருந்து பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் ஆலியா மானசாதான் சந்தியாவாக நடித்து வந்தார். முதலில் அவர் இந்த நாடகத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர் ரியா விஸ்வநாதன் நடித்து வந்தார். அவரும் விலகி தற்போது கோகுலத்தில் சீதை நாடகத்தில் நடித்து வந்த ஆஷா கௌடா சந்தியாவாக நடித்து வருகிறார். பின்னர் இந்த கதையில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே அர்ச்சனா விலகினார். பின்னர் இந்த நாடகத்தை இயக்கி வந்த பிரவீன் பென்னட்டும் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். தற்போது கதைப்படி சந்தியா ஐபிஎஸ் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் கதையில் அடுத்து அடுத்து திருப்பங்கள் நடந்து வருகிறது. அதில் சந்தியா கணவரின் தம்பி செந்திலுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அதை பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணின் குழந்தையுடன் மாற்றி வைத்து விட்டார்.

தொடர்புடையவை  வடிவேல் பாலாஜியின் 2வது நினைவு நாள்.! கண்ணீருடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகழ்

என் புள்ளையை கண்டுபிடிச்சு குடு சந்தியா..! பதட்டத்தில் உண்மையை உளறிய அர்ச்சனா..! 3
இந்த நிலையில் தற்போது குழந்தைக்கு ஒரு பரிகாரம் செய்ய வேண்டும் என்று பக்கத்து வீட்டில் விளையாடி கொண்டிருந்த தன்னுடைய குழந்தையை எடுத்துக்கொண்டு ஓட நினைக்கிறார். ஆனால் திடீரென வண்டியில் வரும் இருவர் குழந்தையை திருடி கொண்டு ஓடுகின்றனர். இதனால் சந்தியாவிடம் சென்று கதறி அழும் அர்ச்சனா குழந்தையை கண்டுபிடித்து தருமாறு அழுகிறார். இதனால் சந்தியாவுக்கு சந்தேகம் வருகிறது. பக்கத்து வீட்டு குழந்தைக்காக அர்ச்சனா எதற்கு கதறி அழுகிறார் என்று சந்தியாவுக்கு சந்தேகம் எழுகிறது. இதனால் அர்ச்சனா குழந்தையை மாற்றியதை சந்தியா கண்டுபிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.! Watch the Below Video..! 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment