பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை VJ சித்ரா வழக்கில் திடீர் திருப்பம்.! ஹேம்நாத் மேல் அடுத்த குற்றச்சாட்டு.!

வெளியிட்டது

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சித்ராவின் தந்தை காமராஜ் தற்போது புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார். இதனால் மீண்டும் இந்த விஷயம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களை கொள்ளை கொண்டவர் விஜே சித்ரா. இவர் ஷூட்டிங் முடிந்து தனது வருங்கால கணவர் ஹேம்நாத் உடன் தனியார் ஹோட்டலில் தங்கி இருந்தபோது அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று சித்ராவின் வருங்கால கணவர் ஹேம்நாத் தொடர்ந்து பேட்டிகளில் கூறி வந்தார். அவர் மீது வழக்கு பதியப்பட்டு சில நாட்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தும் வந்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை VJ சித்ரா வழக்கில் திடீர் திருப்பம்.! ஹேம்நாத் மேல் அடுத்த குற்றச்சாட்டு.! 1

பின்னர் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. சித்ராவின் பெற்றோர்கள் பல தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்தும், தன்னுடைய மகள் மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணமென்று கூறியும் இந்த விசாரணை முன்னேற்றமே இல்லாமல் போனது. இந்த நிலையில் தற்போது சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார். இதனால் மீண்டும் இந்த வழக்கு சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அவர் தனது மனுவில் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது மகள் சித்ரா உயிரிழந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறதாவும், தன்னுடைய முதுமை காரணமாக தன்னால் திருவள்ளுவர் வரை சென்று வர முடியவில்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனால் இந்த வழக்கு விசாரணையை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மாற்று மாறும் இந்த வழக்கு விசாரணையை இழுத்தடிக்க ஹேம்நாத் பல வழக்குகளை பதிந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டால் இந்த வழக்கு விசாரணை சூடு பிடிக்கும் என்று தெரிகிறது. சித்ராவின் கொலையில் முன்னாள் அமைச்சர்கள் சிலரின் பெயரும் அடிபடுவதால் இந்த வழக்கு எந்த அளவிற்கு முன்னேற்றத்தை எட்டும் என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது. விரைந்து சித்ராவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். அந்த செய்தியை நீங்களும் காண..! கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Puthiya Thalaimurai News

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்