விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சேகர் அர்ஜூனிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு தற்போது தமிழுக்கும் சரஸ்வதிக்கும் துரோகம் செய்திருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது சீரியல் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். தமிழும் சரஸ்வதியும் தொடர் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது அர்ஜூனுக்கு எதிராக சரஸ்வதியும் நமச்சியும் செய்துவரும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து வருகிறது. தற்போது கூட சேகர் என்பவரிடம் வீடியோ ஆதாரம் ஒன்றை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில், தற்போது சேகரும் பணத்தை வாங்கிக் கொண்டு அர்ஜுன் ஆளாக மாறி இருக்கும் சோகம் நடந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோதையின் மருமகனாக இருக்கும் அர்ஜூன் கோதை குடும்பத்தை சீரழிப்பதற்காக பலகட்ட சதிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் முதல் பகுதியாக கோதையின் மூத்த மகனாக இருக்கும் தமிழை அவர் கையாலேயே வீட்டை விட்டு அடித்து விரட்டும்படி செய்து விட்டார். தமிழ் தன்னை கத்தியால் குத்த வந்ததாக பொய் கூறுகிறார் அர்ஜூன் இதை நம்பும் கோதை மற்றும் அவரது மகள் ராகினி தமிழை வெறுக்கத் தொடங்குகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை, அவன் நடத்திய நாடகம் என்று நம்ப வைக்க தற்போது தமிழ், சரஸ்வதி, நமச்சி என்று பலரும் படாத பாடு பட்டு வருகின்றனர். இந்த வகையில் அந்த வீடியோ ஆதாரங்களை எடுக்க சேகர் என்பவரை அனுப்பியிருந்தனர். ஆனால் சேகரும் தற்போது அர்ஜுனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவனது ஆளாக மாறி வீடியோக்களை அழித்து விட்டார்.

அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ப்ரோமோவைப் பார்த்த பலரும் இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் அர்ஜுன் கையே ஓங்கிக் கொண்டிருக்கும்.? தயவு செய்து கதையை மாற்றுங்கள் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ளது..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television