நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் தனது பேரன் பேத்திகளுடன் தற்போது தனது 37வது திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவரது மகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். திரைத் துறையில் எண்பது 90களில் நடித்து தனக்கென தனி முத்திரையை பதித்தவர் நடிகர் பாண்டியராஜன். இவருடைய உருவமும், திருட்டு முழியும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்ட இவரின் நடிப்பும் பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஆரம்பத்தில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த அவர் பின்னர் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என பல திறமைகளை கொண்ட அவர் கன்னி ராசி என்கிற படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் ஆண்பாவம், கபடி கபடி, நெத்தியடி போன்ற பத்து படங்களுக்கு மேல் இவர் இயக்கியிருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் பல கலைஞர்களை திரைத்துறைக்கு அடையாளம் காட்டியதும் பாண்டியராஜன் தான். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவாளர் நித்யா, நடிகை சீதா, நடிகர் மயில்சாமி போன்ற பல கலைஞர்களை திரைத்துறைக்கு அறிமுகம் காட்டிய பெருமை பாண்டியராஜனையே சேரும். பாண்டியராஜன் தற்போது குணச்சித்திர வேடங்களில் பலவற்றில் நடித்து வருகிறார். சில காலமாக சினிமா துறையில் இருந்து விலகி இடைவெளி எடுத்துக் கொண்ட அவர் மீண்டும் தற்போது திரைத்துறைக்கு திரும்பி இருக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் பாண்டியராஜ் மீனாவின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தொடர்ந்து சில படங்களிலும் அவர் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் பாண்டியராஜனின் மகன் பிரித்வி பாண்டியராஜன் தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் 37 வருடமாக மனைவியுடன் ஒன்றாக இருக்கும் அவர் தனது திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். மகன்கள் பேரன்கள் என அனைவருடனும் அவர் எடுத்துக் கொண்ட அந்த குடும்ப புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பாண்டியராஜனுக்கும் வாசுகி என்பவருக்கும் 1986 ஆம் ஆண்டு திருமணமானது. இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என்று பன்முகத் திறமையாளராக வளம் வந்த அவிநாசி மணியின் மகளாக இருந்த வாசுகியை பாண்டியராஜன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பல்லவராஜன், பிரித்விராஜன், பிரேம் ராஜன் என்கிற மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இதில் இரண்டாவது மகன் பிரித்திவிராஜன் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். 2006 ஆம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கிய கைவந்த கலை என்ற படத்தின் மூலமாக பிரித்விராஜன் நடிகராக அறிமுகம் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் தனது தந்தை மற்றும் தாயின் 37 வது திருமண நாளுக்கு அவர் அழகிய புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்தி இருக்கிறார்.