பருத்தி வீரன் கார்த்திக், ப்ரியா மணியாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் ஐஸ்வர்யா

வெளியிட்டது

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் கண்ணன் மற்றும் தீபிகா இருவரும் சேர்ந்து செய்து வரும் ரீல்ஸ் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் முல்லைக்குப் பிறகு ரொமான்ஸ் செய்யும் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் தான் கண்ணன் ஐஸ்வர்யா. இவர்கள் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை பெரிய அளவில் கவர்ந்தது. சின்ன பையன் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது கண்ணனுக்கு திடீரென காதல் ஆசை வரவே, அவர் தன்னுடைய முறைப்பெண்ணான ஐஸ்வர்யாவை பல தடைகளை கடந்து திருமணம் செய்து கொள்வார். இதனால் மனம் உடைந்து கண்ணனின் தாயாரும் இறந்து விடுவார். இதனால் கோபமான மூத்த் அண்ணன் மூர்த்தி கண்ணனை வீட்டை விட்டே வெளியே அனுப்பி விடுவார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! 

இதில் ஆரம்பத்தில் ஐஸ்வர்யாவாக விஜே தீபிகா நடித்து வந்தார். இவர் முகத்தில் நிறைய பருக்கள் இருந்ததால் தான் இவர் மாற்றப்பட்டார் என்று அப்போது செய்திகள் வெளிவந்தது. தற்போது அவருக்கு பதில் சாய் காயத்ரி ஐஸ்வர்யாவாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் கண்ணனுக்கு சாய் காயத்ரி அக்கா போல் இருக்கிறார், இந்த ஜோடி செட்டாகவில்லை என்று பலரும் விமர்சித்து வந்தனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சாய் காயத்ரியையும் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சாய் காயத்ரி ஐஸ்வர்யாவாக நடிக்க தொடங்கிய பின்பு, கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவின் ரொமான்ஸ் காட்சிகள் சுத்தமாக இல்லாமலே போனது.

கண்ணனாக நடிக்கும் சரவண விக்ரமும் ஐஸ்வர்யாவாக நடித்த விஜே தீபிகாவும் நிஜ வாழ்க்கையில் மிக நெருங்கிய நண்பர்கள். இருவரும் சேர்ந்து அடிக்கடி படங்களில் வருவது போல உடைகளை அணிந்து ரீல்ஸ் செய்து அதை வீடியோக்களாக வெளியிட்டு வருவது வழக்கம். இருவரும் இணைந்து சில குறும்படங்களிலும் நடித்துள்ளனர். படத்தில் வரும் காட்சிகளை அப்படியே ரீகிரியேஷன் செய்து வெளியிட்டு வருகின்றனர். மேலும் விஜே தீபிகா தனியாக யூடியூப் சேனலை ஒன்று தொடங்கி இருக்கிறார். அதற்கும் விக்ரம் சரவணன் சப்போர்ட்களை செய்து வருகிறார். தற்போது இருவரும் சேர்ந்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது, போகிற போக்கை பார்த்தால் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் போல என்று கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர். Watch the below video…

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்