Categories: சினிமா

இந்த வாரம் வந்த படங்களல்ல இது கொஞ்சம் தேவலாம்.! பரம்பொருள் படம் பற்றி ப்ளூ சட்டை விமர்சனம்.!

வெளியிட்டது

நடிகர் சரத்குமார் அமிதாஷ் பிரதான் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் பரம்பொருள். சிலைக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் நேற்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. தற்போது இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அவர் கூறியதாவது, ஹீரோவின் அக்காவிற்கு உடல்நிலை சரியில்லை. அதனால் ஹீரோவுக்கு பணத்தேவை இருக்கிறது. இதனால் ஹீரோ சில திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார். அப்போது போலீஸ் காரராக இருக்கும் சரத்குமார் வீட்டிலும் திருடச் செல்கிறார். சரத்குமார் ஒரு நேர்மையற்ற போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் வந்த படங்களல்ல இது கொஞ்சம் தேவலாம்.! பரம்பொருள் படம் பற்றி ப்ளூ சட்டை விமர்சனம்.! 1
இவர் ஹீரோவை பற்றி தெரிந்து கொண்டு அவருடன் சேர்ந்து சிலை கடத்தலில் ஈடுபட சொல்கிறார். அப்படி ஈடுபட்டால் ஒரு பங்கு பணத்தை கொடுப்பதாக கூறுகிறார். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கிளைமாக்ஸில் ஒரு வேறு கதையை கொண்டு வருகிறார்கள். இது பார்க்க விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. ஆனால் பல படங்களை பார்த்தவர்களுக்கு இந்த கிளைமாக்ஸ் செய்யும் யூகிக்கும்படியாகத்தான் இருந்தது. முடிவு சிறிது ரசிக்கும் படியாக இருந்தது.அதுவே மைனஸ் ஆக இருந்தது. எளிதில் கணிக்க முடியும் அளவிற்கு இருந்தது. சரத்குமார் நல்லவரா? கெட்டவரா? எப்படிப்பட்டவர்? என்பதை கணிக்க முடியாத ஒரு கதாபாத்திரத்தில் திறம்பட நடித்துள்ளார்.

ஹீரோ, சரத்குமார், பாலாஜி சக்திவேல் ஆகியோர் பேரம் பேசும் காட்சிகள் எல்லாம் அருமையாக வந்திருந்தது. டெக்னிக்கல் டீம் நன்றாக வேலை செய்து இருக்கிறார்கள். இரண்டரை மணி நேர படத்தை இரண்டு மணி நேரமாக சுருக்கி இருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும். இருந்தபோதிலும் இந்த வாரம் வெளியான படங்களில் ஓரளவிற்கு தேவலாம் என்கிற அளவில் இந்த படம் இருப்பதாக ப்ளூசட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்தார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits:  Tamil Talkies

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்